சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
“தேசிய நெடுஞ்சாலை சிறப்பு விருதுகள்” 2021
Posted On:
27 JUN 2022 1:02PM by PIB Chennai
நாட்டில் சாலைகளின் உள்கட்டமைப்பை மேம்படுத்த, மற்றும் வலுப்படுத்துவதற்காக, சாலைகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்கப்படுத்த, மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை, 2018-ம் ஆண்டு முதல், தேசிய நெடுஞ்சாலை சிறப்பு விருதுகளை, வழங்கி வருகிறது. இது சாலைக் கட்டுமான மற்றும் பராமரிப்புப் பணிகளில் ஈடுபடுவோரிடையே ஆரோக்கியமான போட்டி மனப்பான்மையை ஏற்படுத்தும்.
நாடு முழுவதுமுள்ள சாலை சொத்துக்களை சரியாகப் பராமரித்து வரும் மற்றும் சுங்கச்சாவடிகளுக்கான நிறுவனங்களை அங்கீகரிப்பதற்காக விருது வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டது. சாலைகளின் கட்டுமானம், பராமரிப்பு, நெடுஞ்சாலை மேம்பாடு பாதுகாப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்டவற்றுடன், உலகத்தரம் வாய்ந்த சாலை உள்கட்டமைப்பு, மேம்பாலங்கள், சுங்கச்சாவடிகள், அதிவேக நெடுஞ்சாலைகள், மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.
இந்த ஆண்டுக்கான விருது வழங்கும் நிகழ்ச்சி ஜூன் 28 (நாளை) நடைபெறுகிறது. மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் திரு.நிதின் கட்கரி, சாலை சொத்துக்கள் மற்றும் சுங்கச்சாவடிகளை சிறப்பாக பராமரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களுக்கு விருதுகளை வழங்கவுள்ளார். 4-வது ஆண்டாக வழங்கப்படும் இந்த விருதுகளில், சிறந்த மேம்பாலங்கள் மற்றும் சுரங்கப்பாதைகளை உருவாக்கிய நிறுவனங்களுக்கான விருதுகள் புதிதாக வழங்கப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837274
***************
(Release ID: 1837300)