உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தடய அறிவியல் திறன் குறிப்பிட்ட காலத்திற்குள் வலுப்படுத்துதல் மற்றும் அறிவியல்பூர்வ புலனாய்வு என்ற தலைப்பில் குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற மத்திய உள்துறை அமைச்சகத்தின் நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டத்திற்கு உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமை தாங்கினார்

प्रविष्टि तिथि: 26 JUN 2022 6:33PM by PIB Chennai

குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை கையாளும் இத்தருணத்தில் அவர்களுக்கு ஒருபடி மேலாக புலனாய்வு அமைப்புகள் செயல்பட வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா வலியுறுத்தியுள்ளார். குற்றங்களை கண்டறிய தொழில்நுட்பம் மற்றும் ஆதாரம் அடிப்படையிலான புலனாய்வில் கவனம் செலுத்த வேண்டிய நேரம் இது என்று அவர் கூறியுள்ளார். 

6 ஆண்டுகளுக்கும் கூடுதலான சிறைத்தண்டனையுடன் கூடிய அனைத்து குற்ற வழக்குகளிலும் தடயவியல் விசாரணையை கட்டாயமாக்கும் நோக்கில் மோடி அரசு செயல்பட்டு வருகிறது என்று அவர் தெரிவித்தார். புதிய தொழில்நுட்பத்தில் இளைஞர்களின் புதுமைக் கண்டுபிடிப்புகளுக்காகவும், நிபுணர்களுக்காகவும் ஹேக்கத்தான் போட்டிகள் நடத்தப்படுவதாகவும் தடய அறிவியல் துறையில் மனித வளத்திற்கு பயிற்சி அளிப்பதற்காக தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழம் அமைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு கல்லூரியை தேசிய தடய அறிவியல் பல்கலைக்கழகத்துடன் இணைக்குமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளதாகவும் திரு அமித் ஷா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837146

-----


(रिलीज़ आईडी: 1837156) आगंतुक पटल : 256
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Gujarati