உள்துறை அமைச்சகம்
சர்வதேச போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா வெளியிட்டுள்ள செய்தி
प्रविष्टि तिथि:
26 JUN 2022 4:33PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடியின் வழிகாட்டுதலின் பேரில் போதைப் பொருளுக்கு எதிரான கொள்கையை உள்துறை அமைச்சகம் பின்பற்றி வருவதாக மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா கூறியுள்ளார். சர்வதேச போதைப் பொருள் மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள செய்தியில், ‘போதைப் பொருள் இல்லா இந்தியா’ என்ற பிரதமர் திரு நரேந்திர மோடியின் உறுதியை நிறைவேற்றும் வகையில் பணியாற்றி வரும் போதைப் பொருள் தடுப்பு அமைப்பு, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவருக்கும் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தேசிய பாதுகாப்புக்கு போதைப் பொருள் அடிமைத்தனமும் ஒரு பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது என்று கூறிய அவர், இதனைக் களைய முடியும் என்று கூறினார். அதற்கு அனைவருடைய ஒத்துழைப்பால் மட்டுமே சாதிக்க முடியும் என்று தெரிவித்தார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையின் கீழ், போதைப் பொருள் கடத்தலைத் தடுப்பதற்காக மத்திய அரசு விரிவாக பணியாற்றி வருகிறது என்று அவர் தெரிவித்தார். இதற்கான பணிகளுக்கு நாம் ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும் அவர் கூறினார். கடந்த 8 ஆண்டுகளில் அதற்கு முந்தைய 8 ஆண்டுகளைவிட 25 மடங்குகள் அளவிற்கு போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாக அவர் தெரிவித்தார். போதைப் பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணம், தேசிய பாதுகாப்புக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக உள்ளது என்று திரு அமித் ஷா கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1837118
----
(रिलीज़ आईडी: 1837140)
आगंतुक पटल : 358