பிரதமர் அலுவலகம்

14-வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் பிரதமர் பங்கேற்பு

Posted On: 24 JUN 2022 10:22PM by PIB Chennai

சீன அதிபர் திரு ஜீ ஜின்பிங் தலைமையில் ஜூன் 23-24 2022 ஆகிய தேதிகளில் காணொலி வாயிலாக நடைபெற்ற 14வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் இந்தியாவின் சார்பாக  பிரதமர் திரு நரேந்திர மோடி பங்கேற்றார். ஜூன் 23-ஆம் தேதி நடைபெற்ற உச்சிமாநாட்டில் பிரேசில் அதிபர் திரு ஜெர்மன் போல்சோனாரோ, ரஷ்ய அதிபர் திரு விளாடிமிர் புட்டின், தென்னாபிரிக்க அதிபர் திரு சிரில் ரமஃபோசா ஆகியோரும் கலந்து கொண்டனர். உச்சிமாநாட்டின் பிரிக்ஸ் அமைப்பு அல்லாத பிரிவான சர்வதேச மேம்பாடு பற்றிய உயர்நிலை பேச்சுவார்த்தை ஜூன் 24 அன்று நடைபெற்றது.

தீவிரவாத எதிர்தாக்குதல், வர்த்தகம், சுகாதாரம், பாரம்பரிய மருத்துவம், சுற்றுச்சூழல், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமை, வேளாண்மை, தொழில்நுட்ப மற்றும் தொழில்கல்வி மற்றும் பயிற்சி உள்ளிட்ட துறைகள், பலதரப்பு அமைப்புமுறைகளின் சீர்திருத்தம், கொவிட்-19 பெருந்தொற்று, உலகளாவிய பொருளாதார மீட்சி உள்ளிட்ட சர்வதேச முக்கிய விஷயங்கள் பற்றியும் ஜூன் 23 அன்று தலைவர்கள் விவாதித்தனர். பிரிக்ஸ் அமைப்பின் அடையாளத்தை வலுப்படுத்தவும், பிரிக்ஸ் ஆவணங்கள், பிரிக்ஸ் ரயில்வே ஆராய்ச்சி இணைப்பு ஆகியவற்றுக்கு இணைய தரவை உருவாக்கவும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பை மேம்படுத்தவும் பிரதமர் வலியுறுத்தினார். பிரிக்ஸ் நாடுகளில் உள்ள புத்தொழில் நிறுவனங்களுக்கு இடையேயான இணைப்பை வலுப்படுத்துவதற்காக பிரிக்ஸ் புத்தொழில் நிகழ்ச்சியை இந்த ஆண்டு இந்தியா நடத்தவிருக்கிறது. பிரிக்ஸ் உறுப்பினர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் பாதுகாப்பு சவால்களை புரிந்துக்கொண்டு, தீவிரவாதிகளை அடையாளம் காண்பதில் பரஸ்பர ஆதரவு வழங்க வேண்டும் என்றும், இத்தகைய உணர்வுபூர்வமான விஷயங்களை அரசியலாக்கக் கூடாது என்றும் பிரதமர் குறிப்பிட்டார். உச்சிமாநாட்டின் முடிவில் ‘பீஜிங் பிரகடனத்தை' தலைவர்கள் ஏற்றுக்கொண்டனர்.

ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, தென்கிழக்கு ஆசியா, பசிபிக் முதல் கரீபியன் வரை இந்தியாவின் கூட்டுமுயற்சி மேம்பாடு; தடையற்ற வெளிப்படையான உள்ளடக்கிய விதிகளின் அடிப்படையிலான கடல்சார் பகுதியில் இந்தியாவின் கவனம்; இந்திய பெருங்கடல் முதல் பசிபிக் பெருங்கடல் வரையில் உள்ள அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒற்றுமைக்கு மரியாதை; ஆசியாவின் பெரிய பகுதிகள் மற்றும் ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா முதலியவை உலகளாவிய முடிவு எடுக்கும் விஷயங்களில் குரல் கொடுக்காததால் பலதரப்பு அமைப்புமுறையில் சீர்திருத்தம் முதலியவை  குறித்து ஜூன் 24 அன்று பிரதமர் எடுத்துரைத்தார். சுழற்சி பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை குறிப்பிட்ட பிரதமர், சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை என்ற லைஃப் பிரச்சாரத்தில் இணையுமாறு பங்கேற்ற நாடுகளின் குடிமக்களுக்கு அழைப்பு விடுத்தார். அல்ஜீரியா, அர்ஜென்டினா, கம்போடியா, எகிப்து, எத்தியோப்பியா, ஃபிஜி, இந்தோனேசியா, ஈரான், கசகஸ்தான், மலேசியா, தாய்லாந்து மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டன.

**************



(Release ID: 1836914) Visitor Counter : 218