ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம்

பதப்படுத்தும் தொழில் துறையில் பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உற்பத்தி மற்றும் பயன்பாடு குறித்த கருத்தரங்கின் தொடக்க அமர்வுக்கு மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை வகித்தார்

Posted On: 24 JUN 2022 3:54PM by PIB Chennai

தில்லி ஐஐடி-யின் ரசாயன பொறியியல் துறை இந்திய ரசாயன பொறியாளர்கள் கல்விக் கழகம் ஏற்பாடு செய்திருந்த  ‘பதப்படுத்தும் தொழில் துறையில் பசுமை ஹைட்ரஜன், பசுமை அமோனியா உற்பத்தி மற்றும் பயன்பாடு” குறித்த இரண்டு நாள்  கருத்தரங்கின் தொடக்க அமர்வில் மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை, சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்றினார். இந்த கூட்டத்தில் ரசாயனம் மற்றும் உரத்துறை இணையமைச்சர் திரு பகவந்த் கூபாவும் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி மற்றும் மேம்பாட்டில் புதிய கண்டுபிடிப்பையும், ஆராய்ச்சி மற்றும் உற்பத்தியில் வளர்ச்சியையும் ஏற்படுத்துவது அவசியம் என்று கூறினார். பசுமை எரிசக்தி என்ற இலக்கை அரசு மட்டுமே சாதித்துவிட முடியாது என்றும், தேசிய ஹைட்ரஜன் இயக்கத்தின் இலக்கை எட்டுவதற்கு தொழில் துறை – கல்வியாளர்கள்- அரசு ஆகியவற்றின் கூட்டிணைவு மிகவும் முக்கியம் என்று அவர் குறிப்பிட்டார். நமது நாட்டின் முக்கிய தேவையாக எரிசக்தி உள்ளது என்றும், அதில் பசுமை ஹைட்ரஜன் இயக்கம் முக்கியமான பங்குவகிக்கிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

தேசம் முதலில் என்ற அணுகுமுறையுடன் நமது  நாட்டுக்கு மட்டுமின்றி, உலகத்திற்காகவும் கட்டுப்படியாகும் விலையிலும் எளிதில் கிடைக்கும் வகையிலும் பசுமை ஹைட்ரஜன் உற்பத்திக்கு அனைவரும் பாடுபடவேண்டும் என்று டாக்டர் மன்சுக் மாண்டவியா வலியுறுத்தினார். சூரிய எரிசக்தி திறனை அதிகரிக்கும் இலக்கை எட்டுவதன் மூலம் அதன் விலையை குறைத்து விஸ்வகுருவாக நாம் மாறமுடியும் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1836750  

***************



(Release ID: 1836812) Visitor Counter : 164