இந்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகரின் அலுவலகம்
இந்தியாவின் தேசிய காற்றுத் தர வளக் கட்டமைப்பின் பயிலரங்கு
Posted On:
24 JUN 2022 2:48PM by PIB Chennai
மத்திய அரசின் முதன்மை அறிவியல் ஆலோசகர் பேராசிரியர் அஜய்குமார் சூட் புதுதில்லி இந்தியா சர்வதேச மையத்தில், பெங்களூரூ தேசிய உயர்கல்வி நிறுவனம் உருவாக்கிய தேசிய காற்றுத்தர வளக்கட்டமைப்பின் பயிலரங்கை கடந்த 22-ந் தேதி தொடங்கிவைத்தார். காற்றுத்தர தரவுகளை சேகரித்து அதன் தாக்கம் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டு, அறிவியல் அடிப்படையிலான தீர்வுகளை நடைமுறைப்படுத்துவதை இந்த கட்டமைப்பு வழங்குகிறது.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய பேராசிரியர் அரசு தொழில்துறை மக்கள் ஆகிய பிரிவில் சம்பந்தப்பட்ட அனைவரையும் ஒன்று சேர்ப்பது அவசியமாகும் என கூறினார். பல பரிமாண சிக்கலான பிரச்சனையாக உருவெடுத்துள்ள மாசை குறைக்க ஆராய்ச்சிகள் அவசியம் என்றும் இதற்கு அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றும் அவர் கூறினார். பிரச்சனைக்கு தீர்வு காண ஒருங்கிணைந்த பலதுறை சார்ந்த அறிவியல் தொழில்நுட்ப அணுகுமுறை தேவை என அவர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் என்ஐஏஎஸ் இயக்குனர் டாக்டர் சைலேஷ் நாயக், பிஎஸ்ஏ அலுவலக அறிவியல் செயலர் டாக்டர் பர்வீந்தர் மைனி, புதுதில்லி எய்ம்ஸ் இயக்குனர் டாக்டர் ரந்தீப் குலேரியா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1836725
***************
(Release ID: 1836737)
Visitor Counter : 246