சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
குஜராத்தின் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலை முன்பாக, 21 ஜுன் 2022 அன்று நடைபெறும் சர்வதேச யோகா தினக் கொண்டாட்டங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தலைமை வகிப்பார்
Posted On:
18 JUN 2022 3:05PM by PIB Chennai
8-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள மைசூரு அரண்மனை வளாகத்தில் நடைபெறும் யோகா தின நிகழ்ச்சிக்கு பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையேற்க உள்ளார். இந்நிகழ்ச்சியில் பிரதமர் ஆற்றும் உரை, டிடி நேஷனல் மற்றும் டிடி-யின் பிற அலைவரிசைகளில் காலை மணி 6.40 முதல் 7 மணி வரை நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது. இதற்கு முன் நடைபெற்ற சர்வதேச யோகா தின கொண்டாட்டங்களின் சிறப்பம்சங்கள் மற்றும் சாதனைகள் குறித்த டிஜிட்டல் யோகா கண்காட்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யோகாவின் வலிமை, சிறந்த பயிற்சிமுறை, ஆராய்ச்சி முடிவுகள், சாதாரண யோகா நடைமுறை உள்ளிட்ட அம்சங்களும், இந்தக் கண்காட்சியில் இடம்பெறும்.
நாட்டின் 75-வது சுதந்திர தினம், சுதந்திர அமிர்தப் பெருவிழாவாக கொண்டாடப்படுவதைப் போன்று, சர்வதேச யோகா தினத்திற்கும், 75 புராதன/ வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றுள், குஜராத்தின் கெவாடியாவில் உள்ள ஒற்றுமை சிலையும் ஒரு இடமாகும். 21 ஜுன் 2022 அன்று இங்கு நடைபெறவுள்ள சர்வதேச யோகா தின நிகழ்ச்சிக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மண்டாவியா தலைமையேற்க உள்ளார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் :
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1835041
***
(Release ID: 1835093)
Visitor Counter : 201