சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

போலியோ துணை தேசிய தடுப்பூசி தினம் ஜூன் 19 முதல் 11 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் நடத்தப்படும்

Posted On: 18 JUN 2022 1:12PM by PIB Chennai

போலியோ என்னும் இளம்பிள்ளை வாத  சொட்டு மருந்து வழங்குவது தொடர்பான 2022 ஆம் ஆண்டிற்கான முதல் துணை தேசிய நோய்த்தடுப்பு நாள்  ஜூன் 19  முதல் பீகார், சண்டிகர், டெல்லி, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரகண்ட் ,மேற்கு வங்காளம் ஆகிய நாட்டின் 11 மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களில் நடத்தப்படுகிறது.

இந்த போலியோ இயக்கத்தின் போது, 5 வயதுக்குட்பட்ட சுமார் 3.9 கோடி குழந்தைகளுக்கு சாவடிகளிலும், வீடு வீடாகச் சென்றும், அலைபேசி மற்றும் போக்குவரத்துக் குழுக்கள் மூலமாகவும் போலியோ சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குவதற்காக, இந்திய அரசு அதன் வழக்கமான நோய்த்தடுப்பு திட்டத்தில் போலியோ வைரஸ் தடுப்பூசியையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

உலக சுகாதார அமைப்பின்  தென்கிழக்கு ஆசியப் பிராந்தியத்தில் உள்ள மற்ற 10 நாடுகளுடன் சேர்ந்து இந்தியாவும் 2014 ம் ஆண்டு மார்ச் 27அன்று போலியோ இல்லாத சான்றிதழைப் பெற்றது. நாட்டில் கடைசியாக 2011 ஜனவரி 13 அன்று மேற்கு வங்க மாநிலம் ஹவுராவில் போலியோ பாதிப்பு ஏற்பட்டது.

உலகளவில், ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளில் போலியோ இன்னும் பரவி வருகிறது. இந்தியா "போலியோ இல்லாத நாடு " என்று சான்றிதழ் பெற்றிருந்தாலும், போலியோ தடுப்பு நடவடிக்கையில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.

உலகளாவிய நோய்த்தடுப்புத் திட்டத்தின் கீழ் கூடுதல் தடுப்பூசிகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், இந்தியா தனது குழந்தைகளை மேலும் மேலும் நோய்களிலிருந்து பாதுகாக்க முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அனைத்து தடுப்பூசிகளும் நாட்டின் கடைசி குழந்தையையும் சென்றடைவது முக்கியமாகும். தேசிய போலியோ திட்டத்தின் கீழ் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் அமைப்புகள் நோய்த்தடுப்பு வழக்கத்தை வலுப்படுத்தவும் 90% க்கும் அதிகமான முழு நோய்த்தடுப்பு செயல்பாட்டை அடையவும் பயன்படுத்தப்படுகின்றன.

மாநில அரசுகள் மற்றும் உலக சுகாதார அமைப்பு, யுனிசெப், ரோட்டரி அமைப்புகள் போன்றவை போலியோ ஒழிப்பில் மட்டுமின்றி, வழக்கமான நோய்த்தடுப்பு முயற்சிகளை மேம்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்கு வகித்துள்ளன.

அனைத்து பெற்றோர்களும் தங்களது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

•••••••••••••

 (Release ID: 1835038) Visitor Counter : 435