கலாசாரத்துறை அமைச்சகம்
இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையுடன் (ஏஎஸ்ஐ) இணைந்து கலாச்சார அமைச்சகம் இன்று புராண கிலாவில் யோகா பெருவிழா நிகழ்ச்சியை நடத்தியது.
Posted On:
18 JUN 2022 11:05AM by PIB Chennai
2022 ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இந்திய தொல்லியல் ஆய்வுத் துறையுடன் (ஏஎஸ்ஐ) கலாச்சார அமைச்சகம் இணைந்து இன்று 'யோகா பெருவிழா' நிகழ்ச்சியை புது தில்லியில் உள்ள புராண கிலாவில் ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்ச்சியானது கலாச்சார நலவாழ்வின் நிரந்தர மதிப்பை மக்களிடையே விதைப்பதை நோக்கமாகக் கொண்டதாகும்.
இந்நிகழ்ச்சியில் மத்திய கலாசாரம் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை இணையமைச்சர் திரு அர்ஜுன் ராம் மேக்வால், மத்திய கலாசாரம் மற்றும் வெளியுறவுத் துறை இணையமைச்சர் திருமதி. மீனாட்சி லேகி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்வில் கலாசார அமைச்சகத்தின் அதிகாரிகள் மற்றும் 40க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டுப் பிரதிநிதிகள் உட்பட 500க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.
மொரார்ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனத்தின் பயிற்றுவிப்பாளர்களின் யோகா அமர்வுக்கு பிறகு சரஸ்வதி வந்தனம் இசைத்தலுடன் நிகழ்வு தொடங்கியது.
இந்த நிகழ்வில் உரையாற்றிய திருமதி மீனாட்சி லேகி, ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கைக்கு யோகா முக்கியமானது என்றார். பிரதமர் திரு நரேந்திர மோடியின் முயற்சியால் யோகா உலக அளவில் பரவியிருப்பதாகவும் அவர் கூறினார்.உடல், மனம், நெறிமுறைகள் மற்றும் எண்ணங்களின் நெகிழ்வுத்தன்மைக்கு யோகா எவ்வாறு வழிவகுக்கிறது என்பதை அவர் வலியுறுத்தினார். யோகா பயிற்சி செய்வதன் முக்கியத்துவத்தையும், நெகிழ்வுத்தன்மையோடு இருக்க இயற்கையோடு இணைவது பற்றியும் திருமதி லேகி எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் திரு அர்ஜுன் ராம் மேக்வால், உடல், மனம், அறிவு மற்றும் ஆன்மாவை ஒன்றாக வைத்திருக்க யோகா உதவுகிறது என்று கூறினார். ஜூன் 21-ம் தேதி சர்வதேச யோகா தினத்தை யோகா பயிற்சி செய்வதன் மூலமும், அதன் பலன்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதன் மூலமும் வெற்றிகரமாக கொண்டாடுமாறு மத்திய அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் :
https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1834976
•••••••••••••
(Release ID: 1835011)
Visitor Counter : 201