மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகம்
திரு. பர்ஷோத்தம் ரூபாலா நாளை யோகா அமர்வில் கலந்து கொள்கிறார்
Posted On:
16 JUN 2022 5:06PM by PIB Chennai
75-வது சுதந்திரதின அம்ரித பெருவிழா, சர்வதேச யோகா தினம் 2022-க்கான முன்னோட்ட நிகழ்ச்சியின் ஒருபகுதியாக, குஜராத்தின் சோம்நாத்தில் நடைபெறவுள்ள யோகா விழாவில் தலைமை விருந்தினராக இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சர் திரு.பர்ஷோத்தம் ரூபாலா கலந்து கொள்கிறார். அரபிக் கடலில் சூரியன் மறையும் நேரத்தில், சோம்நாத் கோவில் வளாகத்தில் நடைபெறும் யோகாசன நிகழ்ச்சியில் ஜுனாகத், அம்ரேலி, மற்றும் ராஜ்கோட்டாட் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பால்பண்ணை உரிமையாளர்களுடன் மத்திய அமைச்சர் கலந்து கொள்கிறார்.
இந்திய அரசு, 75-வது சுதந்திரதின அம்ரித பெருவிழாவை கொண்டாடி வருகிறது மற்றும் ஆயுஷ் அமைச்சகம் சர்வதேச யோகாதின முன்னோட்ட நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு இந்திய அரசின் மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை அமைச்சகம், குஜராத்தின் சோம்நாத்தில், ஜுன் 17-ம் தேதி யோகா திருவிழாவை கொண்டாடுகிறது. யோகா திருவிழாவின் முக்கிய கருப்பொருள் சரியான வாழ்க்கை மற்றும் சத்தான உணவுடன் கூடிய யோகா ஆகும்.
யோகாவின் பரந்த நோக்கம், உலகளவில் யோகாவை பரப்புவதற்கும், வளர்ப்பதற்கும், தாக்கத்தையும், உறுதியையும் ஏற்படுத்தும்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1834559
***************
(Release ID: 1834577)
Visitor Counter : 156