பெட்ரோலியம் மற்றம் இயற்கை எரிவாயு அமைச்சகம்

அதிகரிக்கும் எந்த தேவையையும் பூர்த்தி செய்யும் வகையில், நாட்டின் பெட்ரோல்,டீசல் உற்பத்தி போதிய அளவிற்கும் கூடுதலாகவே உள்ளது

Posted On: 15 JUN 2022 5:31PM by PIB Chennai

கடந்த சில நாட்களாக சில பகுதிகளில் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனங்களின் சில்லறை விற்பனை நிலையங்களில் நெரிசல் அதிகமாக இருந்ததால் வாடிக்கையாளர்களின் காத்திருப்பு நேரம்  அதிகரிப்பதற்கும் கால தாமதத்திற்கும்  வழிவகுத்தது. இதன் காரணமாக பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்களின் விநியோகத் தட்டுப்பாடு இருப்பதான ஊகம் ஏற்பட்டது.

சில மாநிலங்களின் குறிப்பிட்ட பகுதிகளில் சென்ற ஆண்டு இதே காலத்தைவிட 2022 ஜூன் மாத முதல் பாதியில் பெட்ரோல், டீசலுக்கான தேவை 50% அதிகரித்தது  உண்மை. இந்த நிலைமை குறிப்பாக ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களில் காணப்பட்டது. இந்த  மாநிலங்களில் பெருமளவிலான விநியோகம் தனியார் சந்தை நிறுவனங்களுக்கு சொந்தமான சில்லறை விற்பனை நிலையங்களால் செய்யப்படுகிறது. மேலும், டிப்போக்களுக்கும், விநியோக இடங்களுக்கும், இடையிலான தூரமும்  அதிகமாக உள்ளது.

இந்நிலையில், அதிகரிக்கும் தேவைக்கு ஏற்ப அதனை சமாளிப்பதற்கு நாட்டின் பெட்ரோல், டீசல் உற்பத்தி போதிய அளவிற்கும் கூடுதலாகவே உள்ளது. ஒரு சில பகுதிகளில் ஏற்படும் பிரச்சினைகளுக்கும் தீர்வு காணும் வகையில் எண்ணெய் நிறுவனங்கள் டிப்போக்கள் மற்றும் விநியோக முனையங்களில் கையிருப்பை அதிகரித்து வருகிறது. சில்லறை விற்பனை நிலையங்களுக்கு கூடுதலாக டேங்கர் லாரிகளை இயக்கி வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1834285

***************



(Release ID: 1834344) Visitor Counter : 123