பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்

ஓய்வூதியதாரர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பயன்பாட்டிற்காக செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் பொதுவான ஓய்வூதிய ஒற்றை இணையப்பக்கத்தை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை வி்ரைவில் தொடங்கும் என்று மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்

Posted On: 15 JUN 2022 4:21PM by PIB Chennai

ஓய்வூதியதாரர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் பயன்பாட்டிற்காக செயற்கை நுண்ணறிவால் இயக்கப்படும் பொதுவான ஓய்வூதிய ஒற்றை இணையப்பக்கத்தை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை விரைவில் தொடங்கும் என்றுமத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை (தனிப்பொறுப்பு), புவி அறிவியல் (தனிப்பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொது மக்கள் குறை தீர்வு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்   தெரிவித்துள்ளார். ஓய்வூதியத்தை தடையின்றி பரிசீலிக்கவும், நிலை அறியவும், விநியோகிக்கவும் இது உதவும்.

ஓய்வூதியம் வழங்குதல் மற்றும் நிலை கண்டறிதலுக்கான  இணையப்பக்கம் – பவிஷ்யா பயனாளிகளுடன் கலந்துரையாடிய டாக்டர் ஜிதேந்திர சிங், பிரதமர் திரு நரேந்திர மோடியின் அனைவருக்கும் வாழ்க்கையை எளிதாக்குதல் என்ற நோக்கத்தை மனதில் கொண்டு தொடங்கப்படவிருக்கும் இந்த இணையப் பக்கம்  ஓய்வூதியதாரர்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு தாமாகவே எச்சரிக்கை செய்திகளை அனுப்பி வைக்கும். இந்த இணையப் பக்கம் நாடு முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்கள் மற்றும் மூத்த குடிமக்களுடன் நிலையான தொடர்பு கொண்டிருப்பது மட்டுமின்றி அவர்களிடமிருந்து தகவல்கள், ஆலோசனைகளை பெறுவதோடு, குறைகளுக்குத் தீர்வு காண அவற்றை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்ளும்.

ஓய்வூதியம் குறித்த முறையான நடைமுறைகளுக்காக செயல்படும் பவிஷ்யா இணையப் பக்கம் குறித்து துணை ராணுவப்படையிலிருந்து ஓய்வு பெற்ற பெரும்பாலான மூத்த குடிமக்கள் இத்தகைய தடையில்லா சேவைக்காக மத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1834257

-------



(Release ID: 1834282) Visitor Counter : 273