குடியரசுத் தலைவர் செயலகம்

பெங்களூருவில் உள்ள ஸ்ரீ ராஜாதிராஜ கோவிந்த கோவிலின் தொடக்க விழாவில் குடியரசுத் தலைவர் பங்கேற்றார்

Posted On: 14 JUN 2022 1:49PM by PIB Chennai

பெங்களூருவின் வசந்தபுரா வைகுண்ட மலையில் ஸ்ரீ ராஜாதிராஜ கோவிந்த கோவில்  தொடக்கவிழாவில் இன்று (ஜூன் 14, 2022)   குடியரசுத்தலைவர்  திரு  ராம் நாத் கோவிந்த்  பங்கேற்றார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத்தலைவர், கோவில்கள் என்பவை இந்து சமயத்தின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றாக உள்ளது. ஒரு நிலையில், இவை புனிதமான இடங்களாகும். இவற்றின் மெய்சிலிர்ப்பாக அல்லது சக்தியாக அல்லது ஆழமான பக்தி உணர்வாக தெய்வநிலை இருப்பதாக பக்தர்கள் உணர்கிறார்கள். இது போன்ற இடங்களுக்கு வரும்போது ஒருவர் இந்த உலகத்தையும், அதன் பின்னால் உள்ள சப்தத்தையும் விட்டுவிட்டு அமைதி உணர்வில் உறைகிறார்கள்.  மற்றொரு நிலையில், வழிபாட்டிடம் என்பதைவிட, உயர்ந்ததாக கோவில்கள் கருதப்படுகின்றன. இவை சங்கம இடம் போன்று இருக்கின்றன. அல்லது கலை, கட்டடக்கலை, மொழி, ஞான பாரம்பரியங்கள், ஆகியவற்றின் புனித சங்கமமாகவும்  இருக்கின்றன என்றார்.

கீதையை உலகில் பரப்பியதில் தெய்வத்திரு ஏ.சி.பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதாவின்  பங்களிப்பு பற்றி பேசிய  குடியரசுத் தலைவர், இவர் அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தின் நிறுவனர் என்பதை  நினைவு கூர்ந்தார்.  இவரது படைப்புகள் 70க்கும் அதிகமான மொழிகளில் லட்சக்கணக்கான பிரதிகள், விநியோகிக்கப்பட்டு  எண்ணற்ற மக்களிடம் தெய்வீகச் செய்தி கொண்டுசெல்லப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார். சிரமமான நேரங்களில் ஆன்மீக உதவி தேவைப்படுவோருக்கு ஸ்ரீல பிரபுபாதாவின் வார்த்தைகள், தாகத்தில் தவிப்போருக்கு முதலாவது மழைத்துளி போன்ற உணர்வை  கொண்டதாக திரு ராம் நாத் கோவிந்த் தெரிவித்தார்.  நரக வீதிகளில் ‘ஹரே கிருஷ்ணா’ முழங்கியது.  கலாச்சார செயல்பாடாக மாறியது என்று அவர் கூறினார்.

‘பாடல், ஆடல், வழிபாடு: உத்வேகம் அளிக்கும் ஸ்ரீல பிரபுபாதாவின் கதை’ என்ற நூலின் பிரதியை இந்த நிகழ்ச்சியில் குடியரசுத்தலைவர் பெற்றுக் கொண்டார்.  பெங்களூருவில் உள்ள அகில உலக கிருஷ்ண பக்திக் கழகத்தின் மூத்த துணைத்தலைவர், டாக்டர் ஹிண்டால் சென்குப்தாவும், திரு சஞ்சலபதி தாசாவும் இந்த நூலினை எழுதியுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1833756

******



(Release ID: 1833868) Visitor Counter : 151


Read this release in: English , Urdu , Marathi , Hindi