கூட்டுறவு அமைச்சகம்

குஜராத்தில் இன்று தமது மூன்றாவது நாள் பயணத்தின்போது ஊரக மேலாண்மை நிறுவனமான ஆனந்தின் 41வது வருடாந்தர பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா உரையாற்றினார்

Posted On: 12 JUN 2022 5:26PM by PIB Chennai

குஜராத்தில் இன்று தமது மூன்றாவது நாள் பயணத்தின்போது ஊரக மேலாண்மை நிறுவனமான  ஆனந்தின் 41வது வருடாந்தர பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா  உரையாற்றினார்

 

தங்களின் பட்டங்களைப் பெற்றுள்ள மாணவர்கள் காந்திஜியின் கனவுகளை நனவாக்கப் பாடுபடவேண்டும் என்று அவர் தமது உரையில் கேட்டுக்கொண்டார். ஊரக வளர்ச்சியை துரிதப்படுத்தாமல்ஒரு நாட்டின் பொருளாதாரத்திற்கு பங்களிப்பதாக  ஊரக  வளர்ச்சியை உருவாக்காமல்,   கிராமத்தில் வசிக்கும் ஒவ்வொருவரையும் வளம்  மிக்கவர்களாக  மாற்றாமல் இந்தியா ஒரு போதும் தற்சார்பு உடையதாக மாறாது என்று அவர் கூறினார்.  "பட்டங்கள் பெற்ற மாணவர்கள் தங்களின் வாழ்நாள் முழுவதும் நாட்டின் ஊரக வளர்ச்சிக்காக பாடுபடுவதை நினைவில் கொள்ளவேண்டும் என்று நான் வேண்டுகோள் விடுக்கிறேன். ஏனெனில் இந்தப்  பங்களிப்பிலிருந்து உங்களை யாரும் தடுக்க இயலாது. உங்கள் வாழ்நாள் தொலைநோக்கு பார்வையாக ஊரக வளர்ச்சி இருப்பதற்கு  உறுதி ஏற்பது ஐஆர்எம்ஏவுக்கு குருதட்சணை அளிப்பதாக இருக்கும். இதுவே கிராமங்களில் உள்ள ஏழைகளின்  வாழ்க்கையை வளமாக்கும்" என்று அவர் கூறினார்.

 

ஊரக வளர்ச்சி என்பது வெறுமனே கொள்கை சார்ந்தது அல்ல என்று கூறிய அமைச்சர்கிராமங்களுக்குப் பணியாற்ற உறுதியுடன் தம்மை அர்ப்பணிக்கும்போது மட்டுமே அது நடைபெறும் என்றார். நவீன காலத்தில் ஊரக வளர்ச்சி ஏற்பட்டாலா அது காலத்திற்கு பொருத்தமானதாக மாறிவிடும்.  இன்றைய காலத்தின் தேவைக்கேற்ப அது உருவாக்கப்படும்.  ஊரக வளர்ச்சி என்பது காலத்திற்கேற்ப  அமைக்கப்படவேண்டும். சர்தார் படேல் மற்றும் திருபுவன் பாய் ஆகியோரின் புனிதமான மண்  இதனைக் கள அளவில் கொண்டுசெல்லும் என்று நான் நம்புகிறேன். 

 

பல கோடி ரூபாய் சம்பாதித்த பிறகும் நீங்கள் திருப்தி அடைய முடியாது.  உங்கள் வாழ்க்கையில் ஒரு நபரை சுய தேவை பூர்த்தி அடைந்தவராக மாற்றினால் நீங்கள் சுய திருப்தி அடைய முடியும்.  தீர்வு என்பது வாழ்க்கையில் தீர்மானமாக  இருக்கும்போது மட்டுமே சாத்தியமாகும். திருப்தி என்பது மற்றவர்களுக்கு பணியாற்றுவதில் இருந்து வருகிறது.  டாக்டர் வர்கீஸ் குரியனை நினைவுகூர்ந்த மத்திய கூட்டுறவுத் துறை அமைச்சர்நீடித்த தன்மை, சூழலுக்கு உகந்ததாக இருத்தல்சமத்துவம்சமூக பொருளாதார வளர்ச்சியில் சமநிலை ஆகியவற்றை ஊரக மக்களிடையே  உருவாக்கும் நோக்கத்துடன் இந்த நிறுவனத்தை உருவாக்கினார் என்பதை சுட்டிக்காட்டினார். பட்டம் பெறும்  மாணவர்கள் இதனை எப்போதும் நோக்கமாகக்  கொண்டிருக்க வேண்டும்.  வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை நீங்கள் பெறும்போது அதிலிருந்து  திருப்பித் தருவது உங்களின் நோக்கமாக இருக்க வேண்டும்.  இந்தியாவின் உயிர்நாடி கிராமங்களில் இருக்கிறது என்று காந்தி அவர்கள் குறிப்பிட்டார்.  இந்தியா பலமாக மாற  வேண்டுமென்றால் கிராமங்கள்  வசதியாகவும் தற்சார்புடையதாகவும் இருக்கவேண்டும் என்றார்.  இதைத்தான் 2014ல் திரு நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அவர் பிரதமரான பிறகு இது நடந்தது.  நாட்டிற்கும் உலகத்திற்கும் ஊரக வளர்ச்சி பற்றிய புதிய தொலைநோக்குப் பார்வையை திரு நரேந்திர மோடி முன்வைத்தார்.

 

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாம் கூறிய படி, ஒவ்வொரு நபரும் ஒரு பயன்பாடு கொண்டிருக்கிறார்.   வகுப்பறையில் கடைசி வரிசையில் உள்ள ஒருவர் கூட நாட்டிற்கு சிறந்ததை செய்ய முடியும் . எனவே எவரொருவரும் தாழ்வு மனப்பான்மை கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. ஏனெனில் எந்த ஒருவரும் பிறப்பால் பெரியவராதில்லை. சிறந்த சிந்தனையால் மட்டுமே பெரியவர் ஆகிறார் என்று திரு அமித் ஷா குறிப்பிட்டார்.

 

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:  https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1833311

 

****************



(Release ID: 1833332) Visitor Counter : 136