பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
தேசிய நிர்வாக சேவை வழங்குதல் மதிப்பீடு 2021 அறிக்கையை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திங்களன்று வெளியிடுவார்
Posted On:
12 JUN 2022 1:59PM by PIB Chennai
தேசிய நிர்வாக சேவை வழங்குதல் மதிப்பீட்டு 2021 அறிக்கையை மத்திய அறிவியல் தொழில்நுட்பம் புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) பிரதமர் அலுவலக இணை அமைச்சர், ஊழியர் நலன், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் 2022 ஜூன் 13 அன்று வெளியிடுவார். இந்த அறிக்கை மாநிலங்கள் /யூனியன் பிரதேசங்களின் மதிப்பீட்டையும் குடிமக்களுக்கு இணையதளம் மூலம் சேவைகள் வழங்குவதில் மத்திய அமைச்சகங்களின் செயல்திறனையும் கவனத்தில் கொண்டதாக இருக்கும். நிர்வாக சேவை வழங்கும் நடைமுறைகளை மேலும் விரிவுபடுத்த அரசுக்கு ஆலோசனைகளையும் இந்த அறிக்கை கோருகிறது.
நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்பு துறை இந்த இரண்டாவது ஆய்வை 2021 ஜனவரியில் அறிவித்தது. மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களுடன் 2021 மார்ச் முதல் மே வரையில் 2021 பலவகையான ஆலோசனைப் பயிலரங்குகள் நடத்தப்பட்ட பின் இதற்கான கட்டமைப்பு இறுதி செய்யப்பட்டது. பின்னர் முறைப்படியாக தொடங்கி வைக்கப்பட்ட இந்த இணையதளம் மதிப்பீட்டு நடைமுறையை ஒட்டுமொத்தமாக இணையதளத்தில் நடத்தியது. இந்த மதிப்பீட்டில் பெறப்படும் தரவுகள் பகுப்பாய்வுகள் ஆகியவை 2022 மே வரை 12 மாதங்களுக்கு பயன்படுத்தப்படும்.
நிதி, தொழிலாளர் நலன், வேலைவாய்ப்பு - கல்வி, உள்ளூர் நிர்வாகம், பயன்பாட்டு சேவைகள், சமூக நலன், சுற்றுச்சூழல் சுற்றுலா ஆகிய ஏழு துறைகளின் சேவைகள் பற்றி இந்த அறிக்கை மதிப்பீடு செய்கிறது. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தில் 56 கட்டாய சேவைகள் மத்திய அமைச்சகங்கள் கவனம் செலுத்தும் 27 சேவைகள் குறித்து மதிப்பீடு செய்துள்ளது . இந்த இரண்டாவது அறிக்கை முந்தைய அறிக்கையை விட 8 மாநிலங்கள் யூனியன் பிரதேச நிலையிலான சேவைகளையும் நான்கு மத்திய அமைச்சகங்கள் நிலையிலான சேவைகளையும் சேர்த்துள்ளது.
இந்த அறிக்கையில் மதிப்பீடு நான்கு வகையில் இடம்பெற்றுள்ளது ஒன்று வடகிழக்கு மற்றும் மலை மாநிலங்கள், மற்றொன்று பிரிவு ஏ மாநிலங்கள் மற்றொன்று பிரிவு பீ மாநிலங்கள், அடுத்தது யூனியன் பிரதேசங்கள். பிரிவு ஏ மாநிலங்களைப் பொறுத்தவரை தமிழ்நாடு இரண்டாவது இடத்திலும் யூனியன் பிரதேசங்களைப் பொருத்தவரை புதுச்சேரி மூன்றாவது இடத்திலும் உள்ளது.
மாநில இணையப் பக்க சேவைகளைப் பொறுத்தவரை 85 சதவீத சேவைகளுடன் ஏ பிரிவு மாநிலங்களில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் உள்ளது
மத்திய அமைச்சகங்களின் இணையப்பக்கத்தில் உள்துறை அமைச்சகம் முதலாவது இடத்திலும் ஊரக மேம்பாடு இரண்டாவது இடத்திலும் கல்வி மூன்றாவது இடத்திலும் உள்ளன
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1833276
***************
(Release ID: 1833286)
Visitor Counter : 307