இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மகாராஷ்டிர ஓட்டப்பந்தய வீராங்கனை சுதேஷ்னாவின் ஓட்டத்தை சிறுவயது ஆஸ்துமாவும் தடுத்து நிறுத்த முடியவில்லை

प्रविष्टि तिथि: 10 JUN 2022 3:21PM by PIB Chennai

மகாராஷ்டிர மாநில ஓட்டப்பந்தய வீராங்கனை சுதேஷ்னா, கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில், பெண்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 4X100 மீட்டர் பிரிவுகளில் ஹாட்ரிக் சாதனைப் படைத்து, தங்கப் பதக்கம் வென்றார்.

கேலோ இந்தியா விளையாட்டு போட்டியின் வெற்றி விழாவில் பங்கேற்ற சுதேஷ்னாவின் தாயார் ஹன்மன்த் ஷிவாங்கர், “பல ஆண்டுகளுக்கு முன் என் மகள் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்ள இருப்பதை அறிந்து என் மனம் துடித்தது, ஒரு பீதி தொற்றி கொண்டது” என்று தெரிவித்தார்.

சுதேஷ்னா சிறுவயது முதல் ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டிருந்ததால், அவள் ஓட்டப்பந்தயங்களில் கலந்து கொள்வதை விரும்பாமல், அதனை தடுக்க முயற்சி செய்ததாகவும் நினைவு கூர்ந்தார்.

சிறுவயதில் சுதேஷ்னா பள்ளி சார்பாக நடந்த ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொள்வதை தடுக்க சென்றேன். அதற்குள் அவள் போட்டியில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றிருந்ததாகவும் ஹன்மன்த் ஷிவாங்கர் குறிப்பிட்டார்.

இதனை நினைவுகூர்ந்த சுதேஷ்னா, “நல்லவேளையாக நான் போட்டியில் வெற்றி பெற்ற பிறகு, அன்று முதல் எனது பெற்றோர் எனக்கு ஆதரவு அளித்து வருவதாக” தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832874

                                                                                                                        ***************


(रिलीज़ आईडी: 1832939) आगंतुक पटल : 196
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , Marathi , हिन्दी , Telugu