பிரதமர் அலுவலகம்
ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவு அமைச்சர், பிரதமருடன் சந்திப்பு
प्रविष्टि तिथि:
08 JUN 2022 7:57PM by PIB Chennai
அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவு அமைச்சர் திரு ஹொசைன் ஆமிராப்தொல்லாஹியான், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
பிரதிநிதி குழுவை வரவேற்ற பிரதமர், இந்தியா மற்றும் ஈரான் இடையே உள்ள நீண்ட கால நாகரிகம் மற்றும் கலாச்சார இணைப்பை நினைவுகூர்ந்தார். இருதரப்பு ஒத்துழைப்பு முன்முயற்சிகள் பற்றி இரு தலைவர்களும் ஆலோசித்தனர். கொவிட் தொற்றுக்குப் பிந்தைய காலத்தில் பரிமாற்றங்களை மேம்படுத்துவதற்கு இரு நாடுகளும் பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
ஈரான் அதிபர் திரு இப்ராஹிம் ரெய்சிக்கு தனது வாழ்த்துக்களைத் தெரிவிக்குமாறு அந்நாட்டு வெளியுறவு அமைச்சரை பிரதமர் கேட்டுக் கொண்டதுடன், விரைவில் அதிபரை சந்திக்க ஆவலோடு இருப்பதாகவும் தெரிவித்தார்.
***************
(Release ID: 1832335)
(रिलीज़ आईडी: 1832498)
आगंतुक पटल : 198
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam