மனித வள மேம்பாட்டு அமைச்சகம்

எதிர்கால தொழில்முனைவோர்களாக மாணவர்களை உருவாக்க வேண்டும் என்று திரு தர்மேந்திர பிரதான் அழைப்பு விடுத்துள்ளார்

Posted On: 08 JUN 2022 4:26PM by PIB Chennai

மத்தியப் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் மற்றும் தேசிய அளவில் முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களின் இயக்குநர்கள் பங்கேற்ற இரண்டு நாள் மாநாடு இன்று (08.06.2022) நிறைவடைந்தது. இந்த மாநாட்டை குடியரசுத்தலைவர் திரு ராம் நாத் கோவிந்த், நேற்று தொடங்கி வைத்தார்.  மாநாட்டில் மத்திய கல்வித்துறை அமைச்சர் திரு தர்மேந்திர பிரதான், மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் திரு சுபாஷ் சர்க்கார், பிரதமரின் ஆலோசகர் திரு அமித் காரே, உயர்கல்வித்துறை செயலாளர் திரு சஞ்சய் மூர்த்தி, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இம்மாநாட்டின் நிறைவு நாள் நிகழ்ச்சியில் உரையாற்றிய திரு பிரதான், எதிர்கால தயார் நிலை பணியாளர்களைக் கண்டறிவதற்கான விரைவான அணுகுமுறையை இலக்காக வைக்க வேண்டும் என்று உயர்கல்வி நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தார். தொழில்முனைவோர் குறித்து பேசிய அமைச்சர், நாட்டில் யுனிகான் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறினார். மாணவர்கள் வேலை  தேடுபவர்களாக இல்லாமல் வேலை அளிப்பவர்களாக இருக்கும் வகையில் தயாராக வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832154

-----



(Release ID: 1832173) Visitor Counter : 143