நிலக்கரி அமைச்சகம்

2021-22-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் பற்றிய பட்டியல் - நிலக்கரித்துறை அமைச்சகம் வெளியீடு

Posted On: 08 JUN 2022 11:58AM by PIB Chennai

2021-22-ம் ஆண்டில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் குறித்து மத்திய நிலக்கரித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள பட்டியல் மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

நிலக்கரித்துறை சீர்திருத்தங்கள், நிலக்கரியை கொண்டு செல்லுதல் மற்றும் நிலைத்தன்மை, நிறுவனக் கட்டிடம், எதிர்கால திட்டங்கள் குறித்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 

இந்த பட்டியல், மீதமுள்ள நான்கு திட்டங்களை நிறைவேற்றி முடிப்பதற்கான நோக்கத்துடன், தொகுப்பாக வெளியிடப்பட்டு, மூத்த அதிகாரிகள் அனைவருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிடப்பட்ட 24 பணிகளில் மீதமுள்ள 4 பணிகள் அடுத்த ஆண்டு தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலக்கரித்துறை சீர்திருத்தங்களில், 2021-22-ம் நிதியாண்டுக்கான திட்டங்கள், ஜாரியா மாஸ்டர் பிளான், நிலக்கரி கண்டுபிடிப்பு தொடர்பான முறைப்படுத்தலில் சீர்திருத்தங்கள், நிலக்கரி பயன்பாடு, நிலக்கரி சுரங்கங்கள் பாதுகாப்பு சீர்திருத்தங்கள், சந்தைப்படுத்துதல் மற்றும் விலை குறித்த சீர்திருத்தங்கள், நிலம் கையகப்படுத்துதலில் சீர்திருத்தம், அண்டை நாடுகளின் நிலக்கரி ஏற்றுமதி மற்றும் ஏலத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட சுரங்கங்களில் நிலக்கரி உற்பத்தியை அதிகப்படுத்துதல் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்தி குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832018

***************



(Release ID: 1832098) Visitor Counter : 166