சிறப்பு சேவைகள் மற்றும் கட்டுரைகள்
azadi ka amrit mahotsav

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்தியது

Posted On: 08 JUN 2022 11:32AM by PIB Chennai

ரெப்போ விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகளாக 4.90 சதவீதம் அளவிற்கு உயர்த்துவது என இந்திய ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கை குழு முடிவு செய்துள்ளது. கடந்த 6-ம் தேதி தொடங்கிய இதற்கான கூட்டம் இன்று நிறைவடைந்தது.  மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி விகிதம் 7.2 சதவீதம் அளவுக்கு தொடரும் என்று இக்குழு கணித்துள்ளது. 2022-23-ம் நிதி ஆண்டில் பணவீக்க விகிதம் 6.7 சதவீதமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது. கூட்டுறவு வங்கிகள் மூலமான வீட்டுக்கடனுக்கான உச்சவரம்பு 100 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. நிதிக் கொள்கை குழுவின் அடுத்த கூட்டம் ஆகஸ்ட் 2-ந் தேதி முதல் 4-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1832000

***************


(Release ID: 1832075) Visitor Counter : 236