நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கடந்த 2019-20ம் ஆண்டில் 248 மில்லியன் டன் அளவுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் 2021-22ம் ஆண்டில் 209 மில்லியன் டன் அளவாக குறைந்துள்ளது

Posted On: 02 JUN 2022 4:32PM by PIB Chennai

நாட்டின் எரிசக்தி தேவையை நிறைவேற்றுவதில்  நிலக்கரி துறை  முக்கிய பங்கு வகிக்கிறது. மின்சாரம், உரம், இரும்பு, சிமெண்ட் ஆகியவற்றின் உற்பத்தியில் நிலக்கரி இன்றியமையாததாக உள்ளது.

 கடந்த 2019-20ம் ஆண்டில் 248 மில்லியன் டன் அளவுக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து இரண்டு வருடங்களாக நிலக்கரி இறக்குமதி அளவு குறைந்துள்ளது. கடந்த  2020-21ம் ஆண்டில் 215 மில்லியன் டன் அளவிற்கும் 2021-22ம் ஆண்டில் 209 மில்லின் டன் அளவிற்கும் நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

2019-20ம் ஆண்டில் நிலக்கரியின் தேவை 956 மில்லியன் டன் அளவாகவும் 2021-22ம் ஆண்டில் 1027 மில்லியன் டன் அளவாகவும் இருந்த நிலையில் அதன் இறக்குமதியின் அளவு அதிகரிக்கவில்லை.

இந்த நிலையில் 2020-21ம் ஆண்டில் அகில இந்திய அளவில் நிலக்கரி உற்பத்தி 716 மில்லியன் டன்னிலிருந்து 2021-22 ம் ஆண்டில் 777 டன்னாக அதிகரித்தது. இதன் மூலம் இறக்குமதியின் அளவு குறைந்துள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1830498

***************


(Release ID: 1830594) Visitor Counter : 172
Read this release in: English , Urdu , Hindi , Marathi