சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
ஷெட்யூல்டு வகுப்பைச் சேர்ந்த திறமையான மாணவர்களின் எதிர்காலம் 'ஸ்ரேஷ்டா' மூலம் வளர்க்கப்படும்
Posted On:
02 JUN 2022 3:17PM by PIB Chennai
இலக்கு நிர்ணயிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மாணவர்களுக்கான குடியிருப்புக் கல்வி திட்டம், அரசியலமைப்புச் சட்டப்படி, ஏழை மாணவர்களுக்கும் தரமான கல்வி மற்றும் வாய்ப்புகளை வழங்கும் நோக்கத்துக்காக உருவாக்கப்பட்டது. நீண்ட காலமாக, ஷெட்யூல்டு சமூகத்தை சேர்ந்த மாணவர்கள் தரமான கல்வி கிடைக்கப் பெறாதவர்களாகவும், சமத்துவமின்மைக்கு அப்பாற்பட்டவர்களாகவும் இருந்து வந்தனர். மேலும், தரமான கல்வி அறிவு கிடைக்காததால் முன்னோக்கி செல்லும் வாய்ப்பு இல்லாதவர்களாக இருந்தனர். ஷ்ரேஷ்டா என்பது, பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்குள் உள்ள பட்டியலின சமூகத்தை சேர்ந்த திறமையான ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியை தருவதற்காக உருவாக்கப்பட்டது.
இதன்கீழ், ஆண்டுதோறும் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பட்டியலின மாணவர்கள் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தேசிய நுழைவுத் தேர்வின் வெளிப்படையான வழிமுறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். இவர்கள் சிபிஎஸ்இ பாடத் திட்டத்துடன் கூடிய சிறந்த தனியார் பள்ளிகளில், 9 முதல் 12-ம் வகுப்பு வரை படிப்பதற்காக சேர்க்கப்படுகிறார்கள்.
அதன் பிறகு, இந்திய அரசின் நிதியுதவியுடன் தங்கள் உயர் கல்வியை தொடர்வதற்காக, போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப் திட்டம் அல்லது உயர் வகுப்பு கல்வித் திட்டத்துடன் மாணவர்கள் இணைக்கப்படுவர்.
அதன்படி, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டுக்கு 1 லட்சமும், 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாயும், 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயும், 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு 1 லட்சத்து 35 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும்.
இந்த உதவித்தொகை ஒவ்வொரு நிதியாண்டின் முதல் காலாண்டில், பள்ளிகளுக்கு நேரடியாக ஒரே தவணை முறையில் வழங்கப்படும். மாணவர்களின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றம் அமைச்சகத்தால் கண்காணிக்கப்படும்.
***************
(Release ID: 1830593)
Visitor Counter : 242