நிலக்கரி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

பிரதமரின் கதிசக்தித் திட்டத்தின் கீழ் நிலக்கரி அமைச்சகம் 13 ரயில்வே திட்டங்களை மேற்கொள்கிறது

प्रविष्टि तिथि: 02 JUN 2022 2:42PM by PIB Chennai

ரயில்  போக்குவரத்து மூலம் நிலக்கரி வினியோகத்தை சீராக மேற்கொள்ளும் வகையில், நிலக்கரி அமைச்சகம் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.  இதன் மூலம்  சாலை போக்குவரத்து வழியாக நிலக்கரி அனுப்பும் பணியிலிருந்து விடுபடவும் வழிவகை ஏற்பட்டுள்ளது. இதற்காக புதிய சரக்கு ஏற்றுதல் முனையத்திற்கு ரயில் போக்குவரத்து இணைப்பை விரிவாக்கம் செய்வதற்காக அகல ரயில்பாதை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.

மேலும் ரயில்பாதையை இரண்டு, மூன்று மடங்காக அமைப்பதற்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதற்காக, பிரதமரின் கதிசக்தி திட்டத்தின் கீழ் 13 ரயில்வே திட்டப்பணிகளை நிலக்கரி அமைச்சகம் மேற்கொள்கிறது. இதில் நான்கு திட்டங்கள் வெற்றிகரமாக நிறைவு செய்யப்பட்டுள்ளன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1830437

***************


(रिलीज़ आईडी: 1830481) आगंतुक पटल : 238
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Gujarati , Odia