வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
இறக்குமதி செய்யப்படும் காகித பொருட்களை அக்டோபர் 1-ம் தேதி முதல் கட்டாயம் பதிவு செய்யவேண்டும்
प्रविष्टि तिथि:
26 MAY 2022 6:46PM by PIB Chennai
இறக்குமதி செய்யப்படும் காகித பொருட்களை அக்டோபர் 1-ம் தேதி முதல் கட்டாயம் பதிவு செய்யவேண்டும் என்று வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் நேற்று அறிவிக்கை வெளியிட்டுள்ளது.
செய்தித்தாள், கையாள் தயாரிக்கப்பட்ட காகிதம், சுவரொட்டிகள், லித்தோ மற்றம் ஆஃப்செட், டிஷ்யு, கார்பன், கழிப்பறை காகிதம், கணக்கு புத்தகங்கள், லேபிள் ஆகியவற்றை இறக்குமதி செய்யும்போது அவற்றை பதிவு செய்ய வேண்டும். கரன்சி காகிதம், காசோலை காகிதம் உள்ளிட்டவற்றுக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டிலிருந்து முறைகேடாக காகிதம் இறக்குமதி செய்யப்படுவதாக, உள்நாட்டு காகிதத் தொழிற்சாலை அளித்த புகாரையடுத்து இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது. உற்பத்திக்கான இந்தியா, தற்சார்பு இந்தியா இயக்கத்தை ஊக்கப்படுத்தும் வகையில், இம்முடிவு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காகிதத்தை இறக்குமதி செய்பவர் 500 ரூபாய் பதிவுக் கட்டணம் செலுத்தி ஆன்லைன் மூலம் பதிவு எண்ணைப் பெற வகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=
***************
(रिलीज़ आईडी: 1828570)
आगंतुक पटल : 457