பிரதமர் அலுவலகம்
ஜப்பான் தலைநகர் டோக்கியோவி்ல் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் ஆற்றிய உரை
Posted On:
23 MAY 2022 8:19PM by PIB Chennai
பாரத் மாதா கி ஜெய்
பாரத் மாதா கி ஜெய்
நான் ஒவ்வொரு முறையும் ஜப்பான் வருகை தரும் போதெல்லாம் உங்களுடைய அன்பும் பாசமும் அதிகரித்திருப்பதை நான் காண்கிறேன். உங்களில் பலர், பல வருடங்களாக ஜப்பானில் வசித்து வருகிறீர்கள். ஜப்பான் நாட்டின் மொழி, ஆடை, கலாச்சாரம், உணவு ஆகியவை உங்களின் வாழ்க்கையின் ஒரு அங்கமாக உள்ளது. ஏனெனில், இந்திய வம்சாவளியினரின் கலாச்சாரம், எப்பொழுதும் அதை உள்ளடக்கியதாக உள்ளது ஒரு காரணமாகும்.
நண்பர்களே!
உங்களில் பலர் இங்கேயே திருமணம் செய்து வாழ்ந்து கொண்டிருந்தாலும், இந்தியாவுடனான தொடர்பு உங்களுக்கு தொடர்ந்து இருக்கிறது என்பதை அறிகிறேன். இந்தியா குறித்த மகிழ்ச்சியான செய்தியின் போது நீங்கள் மகிழ்ச்சி அடைகிறீர்கள். அதே நேரத்தில் சோகமான தகவலின் போது உங்களுக்கும் கவலையைத் தருகிறது. நாம் எங்கே பணிபுரிந்தாலும் ஒருவருக்கொருவர் தொடர்புடையவர்களாக இருக்கிறோம். தாய்நாட்டுடனான உறவு என்றும் முறியாது. இது நமது மிகப் பெரிய வலிமை.
நண்பர்களே!
சுவாமி விவேகானந்தர் வரலாற்று சிறப்புமிக்க உரைக்காக சிக்காக்கோ செல்வதற்கு முன் ஜப்பான் சென்றார். அப்போது ஜப்பான் குறித்து சிறந்த எண்ணங்கள் அவர் மனதில் உருவானது. ஒரே நேரத்தில் பாரம்பரியம் மற்றும் நவீன அம்சங்களைக் கொண்ட நாடாக ஜப்பான் திகழ்கிறது என்று குருதேவ் ரவீந்திரநாத் ஜி தாக்கூர் கூறுவார்.
நண்பர்களே!
நான் ஜப்பானுக்கு வந்துள்ள தருணத்தில், இந்தியா – ஜப்பான் இடையேயான தூதரக உறவு தொடங்கி முடிவடைந்த 70 வருடங்களைக் கொண்டாடி வருகிறோம். இந்தியாவும் ஜப்பானும் இயற்கையிலேயே கூட்டாளிகள் என்று இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் உணர்கின்றனர். இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் ஜப்பான் முக்கிய பங்கு வகிக்கிறது. 21-ஆம் நூற்றாண்டில் கூட நாம் இருநாடுகளின் கலாச்சார உறவை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியேற்க வேண்டும். ஜப்பானில் வசிக்கும் நீங்கள் அனைவரும் இருநாடுகளுக்கு இடையிலான வரலாற்று சிறப்புமிக்க பிணைப்பிற்கு காரணமாக திகழ்கிறீர்கள்.
நண்பர்களே!
புத்தர் காட்டிய வழியை உலகில் உள்ள அனைவரும் பின்பற்ற வேண்டும். சவால் மிகுந்த உலகில் மனிதநேயத்தைக் காப்பதற்கு சிறந்த வழியாகும். புத்தர் காட்டிய வழியில் மனித சமுதாயத்திற்கு இந்தியா தொடர்ந்து சேவையாற்றி வருகிறது. எந்த ஒரு சவாலானாலும், பெரிய விவகாரமானாலும் அதற்கான தீர்வை இந்தியா காண்கிறது. கொரோனா தொற்று பாதிப்பு வந்தபோது, அடுத்து என்ன நிகழப்போகிறது என்பது யாருக்கும் தெரியாது. எப்படி கையாளுவது என்பதும் தெரியாது. தடுப்பூசியும் இல்லை, தடுப்பூசி எப்போது கண்டறியப்படும் என்பதும் தெரியவில்லை. இந்நிலையில் உலகின் மற்ற நாடுகளுக்கு இந்தியா மருந்து பொருட்களை அனுப்பியது. தடுப்பூசி கண்டறிந்த பிறகு அதனை நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு அனுப்பப்பட்டது.
நண்பர்களே!
சுகாதார சேவையை மேம்படுத்த இந்தியா பெரும் முதலீடு செய்து வருகிறது. ஊரகப் பகுதிகளில் கூட சுகாதார வசதிகளை அதிகரிக்கும் வகையில், லட்சக்கணக்கான நலவாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள்ளன. இந்தியாவில் உள்ள ஆஷா பணியாளர்களின் சேவையை உலக சுகாதார அமைப்பு பாராட்டியுள்ளது. மகப்பேறு சேவை முதல் தடுப்பூசி, ஊட்டச்சத்து, தூய்மை வரை கிராமங்களில் லட்சக்கணக்கான ஆஷா பணியாளர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
நண்பர்களே!
சர்வதேச சவால்களை எதிர்கொள்வதில் இந்தியா உதவி வருகிறது. பருவநிலை மாற்றம் என்பது உலகில் தற்போது எதிர்கொள்ளப்படும் முக்கிய நெருக்கடியாகும். இதைக் கருத்தில் கொண்டு இதற்கான தீர்வுகளை கண்டறிவதை நோக்கி இந்தியா முன்னேறி வருகிறது. 2070-ஆம் ஆண்டுக்குள் கார்பன் வெளியீட்டை பூஜ்யம் என்ற அளவிற்கு கொண்டுவர வேண்டும் என்பதில் உறுதி பூண்டுள்ளது.
நண்பர்களே!
உயிரி எரிபொருள் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அதற்கான உள்கட்டமைப்பு ஆகியவற்றை இந்தியா பெரிய அளவில் கவனம் செலுத்திவருகிறது. அடுத்த எட்டு ஆண்டுகளுக்குள் 50 சதவீதம் அளவுக்கு புதைப்படிவம் அற்ற எரிபொருளிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யவேண்டும் என்பதில் இந்தியா உறுதியேற்றுள்ளது.
நண்பர்களே!
பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதில் இந்தியர்கள் நம்பிக்கையுடன் திகழ்கின்றனர். இந்த நம்பிக்கையை ஒவ்வொரு துறை, ஒவ்வொரு நிலையிலும் காணமுடியும். கடந்த இரண்டு வருடங்களாக சர்வதேச விநியோகச் சங்கிலி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இது உலகில் மிகப்பெரிய நெருக்கடியாக பார்க்கப்படுகிறது. எதிர்காலத்தில் இதைத் தவிர்ப்பதற்காக தற்சார்பை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம். இது இந்தியாவிற்கான தற்சார்பு என்றில்லாமல் சர்வதேச ஸ்திரதன்மைக்கான மிகப் பெரிய முதலீடாகும். கல்வித்துறையில், இந்தியாவுடன், ஜப்பான் இணைந்து செயல்படுவது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. மும்பை- அகமதாபாத் அதிவேக ரயில், தில்லி – மும்பை தொழில்துறை முனையம், சரக்கு முனையம் ஆகியவை இந்தியா – ஜப்பான் ஒத்துழைப்புக்கு சிறந்த உதாரணமாக திகழ்கின்றன.
நண்பர்களே!
நாம் வலிமையான பொறுப்புமிக்க ஜனநாயகத்தை உருவாக்கியிருக்கிறோம். கடந்த எட்டு வருடங்களாக மக்களின் வாழ்க்கையில், நேர்மறையான மாற்றங்களை உருவாக்கியிருக்கிறோம்.
நண்பர்களே!
தொழில்நுட்ப உதவியுடன், எந்தவித ஊழலுக்கும் இடமளிக்காமல் பணிகளைச் செய்து வருகிறோம். அந்த வகையில், வங்கிக் கணக்கிற்கு நேரடியாக பணம் செலுத்துவதன் மூலம், நம் குடிமக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படுகிறது.
நண்பர்களே!
இக்கட்டான சூழ்நிலையிலும் கூட இந்தியாவின் வங்கிச் சேவை தொடர்ந்த நடைபெற்றிருக்கிறது. மின்னணு புரட்சி இதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. உலகில் மேற்கொள்ளப்படும் மின்னணு நடவடிக்கைகளில் 40 சதவீதம் இந்தியாவில் மட்டும் நடைபெறுகிறது. கொரோனா தொற்றின் தொடக்கக் காலத்தில் இந்திய அரசு ஒரு பட்டனை அழுத்தியதன் மூலம் கோடிக்கணக்கான மக்களுக்கு சேவையாற்றியது.
நண்பர்களே!
ஜப்பானில் உள்ள ஒவ்வொரு இளைஞரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது இந்தியாவிற்கு வருகை தரவேண்டும் என்று நாம் விரும்புகிறேன். ஜப்பான் நாட்டிற்கான இயற்கையான சுற்றுலா தளமாக இந்தியா விளங்குகிறது என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களை மீண்டும் சந்திக்க விரும்புகிறேன். மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
பாரத் மாதா கி ஜெய்
பாரத் மாதா கி ஜெய்
நன்றி!!
**********
(Release ID: 1828266)
Visitor Counter : 199
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam