தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

ரஞ்சித் சிங் காலத்தில் பிரெஞ்சு ராணுவ ஜெனரலாக இருந்தவரின் வழித்தோன்றல்களுக்கு ஹிமாச்சலி தட்டு , தொப்பி மற்றும் சால்வையை திரு அனுராக் சிங் தாக்கூர், செயிண்ட் ட்ரோபஸில் பரிசாக வழங்கினார்

Posted On: 22 MAY 2022 4:30PM by PIB Chennai

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு அனுராக் சிங் தாக்கூர், பிரான்சின் செயிண்ட் ட்ரோபஸில் உள்ள அலார்ட் சதுக்கத்திற்குச் சென்றபோது, ஜெனரல் ஜீன் ஃபிராங்கோயிஸ் அல்லார்ட் மற்றும் அவரது துணைவியார் சம்பா இளவரசி பன்னு பான் டேயின் சந்ததியினருக்கு ஹிமாச்சலப் பிரதேசத்தின் வேலைப்பாடு கொண்ட தட்டு, தொப்பி மற்றும் சால்வையை பரிசாக வழங்கினார். இளவரசி இமாச்சல பிரதேசத்தில் உள்ள சம்பாவில் பிறந்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், நான்கு தலைமுறைகளுக்குப் பிறகும் செயிண்ட் ட்ரோபஸின் இந்திய இணைப்பு தொடருகிறது. இளவரசியின் குடும்பம் செயிண்ட் ட்ரோபஸில் மிகவும் மதிக்கப்படுவதுடன், அதன் இந்திய வேர்களைப் பாதுகாத்துள்ளது என்று  கூறினார்.

பிரான்சில் நடந்து முடிந்த கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியக் குழுவை அமைச்சர் வழிநடத்தினார்.

முன்னதாக, செயிண்ட் ட்ரோபஸில் உள்ள மகாராஜா ரஞ்சித் சிங், அவரது ராணுவ ஜெனரல் மற்றும் அவரது மனைவி ஆகியோரின் மார்பளவு சிலைகளுக்கு அமைச்சர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

***********




(Release ID: 1827434) Visitor Counter : 158