இந்திய போட்டிகள் ஆணையம்
azadi ka amrit mahotsav

மாக்மா எச்டிஐ ஜென்ரல் இன்ஷுரன்ஸ் பங்குகளை சனோதி ப்ராப்பர்டீஸ் எல்எல்பி கையகப்படுத்த சிசிஐ அனுமதி

இடுகை இடப்பட்ட நாள்: 19 MAY 2022 11:54AM by PIB Chennai

மாக்மா எச்டிஐ ஜென்ரல் இன்ஷுரன்சின் பங்குகளை சனோதி ப்ராப்பர்டீஸ் எல்எல்பி வாங்குவதற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையமான சிசிஐ அனுமதி அளித்துள்ளது.

வணிகம் மற்றும் ரியல் எஸ்டேட் தொடர்பான தொழில்களில் சனோதி ப்ராப்பர்டீஸ் எல்எல்பி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

மாக்மா எச்டிஐ ஜென்ரல் இன்ஷுரன்ஸ் நிறுவனம், இந்தியாவில் பொது மற்றும் ஆயுள் அல்லாத காப்பீட்டு வணிகத்தை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், மாக்மா ஜென்ரல் இன்ஷுரன்சின் 53.39 சதவீத பங்குகளை கையகப்படுத்த சனோதி ப்ராப்பர்டீஸ் எல்எல்பி நிறுவனம் விருப்பம் தெரிவித்திருந்தது. இதற்கு இந்திய வணிகப் போட்டி ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

பூனாவாலா ஃபின்கார்ப் லிமிடெட் மற்றும் சீரம் இன்ஸ்டிட்டீயூட் நிறுவனத்தின் பங்குகளை வாங்கவும் சனோதி ப்ராப்பர்டீஸ் எல்எல்பி திட்டமிட்டுள்ளது.

*********


(வெளியீட்டு அடையாள எண்: 1826668) வருகையாளர் எண்ணிக்கை : 180
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Telugu