பாதுகாப்பு அமைச்சகம்
                
                
                
                
                
                    
                    
                        பாதுகாப்புத்துறையில் ஓய்வூதியம் பெறுவோர் மே 25க்குள் ஆண்டு அடையாளத்தை சமர்ப்பிக்க வேண்டும் - மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம்
                    
                    
                        
                    
                
                
                    Posted On:
                18 MAY 2022 4:06PM by PIB Chennai
                
                
                
                
                
                
                மாதாந்திர ஓய்வூதிய திட்டம் சரியாக நடைபெறுவதை உறுதி செய்யும் விதமாக, பாதுகாப்புத்துறையில் ஓய்வூதியம் பெறுபவர்கள், தங்களுடைய ஆண்டு அடையாளம் மற்றும் வாழ்நாள் சான்றிதழை வரும் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்கும்படி மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சம் மீண்டும் ஒருமுறை வேண்டுகோள் விடுத்துள்ளது. 
மாதாந்திர ஓய்வூதியம் பெறுவது தொடர்பாக மே 17-ம் தேதி வரை பெறப்பட்ட தரவுகளை சரி செய்ததில், 43,774 பயனாளர்கள் தங்களின் சரியான விவரங்களை ஆன்லைன் மூலமாகவோ அல்லது வங்கிகள் வழியாகவோ சரிவர தாக்கல் செய்யவில்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
மேலும், பழைய முறையில் ஓய்வூதியம் பெறும் சுமார் 1.2 லட்சம் ஓய்வூதியதாரர்கள், தங்களின் ஆண்டு அடையாளத்தை சரிவர பூர்த்தி செய்யவில்லை என்று தெரிய வந்துள்ளது.  
எனவே வரும் 25-ம் தேதிக்குள் இந்த ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
மேலும் விவரங்களுக்கு - https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1826364 
***************
                
                
                
                
                
                (Release ID: 1826466)
                Visitor Counter : 288