குடியரசுத் தலைவர் செயலகம்

ஜமைக்காவின் கவர்னர் ஜெனரல் அளித்த அரசு விருந்து நிகழ்ச்சியில் இந்திய குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார்

Posted On: 18 MAY 2022 11:12AM by PIB Chennai

ஜமைக்காவிற்கான எனது முதலாவது அரசுமுறை பயணத்தின் போது எனக்கும், எனது தூதுக்குழுவினருக்கும் அளிக்கப்பட்ட அன்பான வரவேற்புக்காக உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறேன். நமது தூதரக உறவுகளின் 60 ஆண்டுகளை குறிக்கும் இத்தருணத்தில் ஜமைக்காவிற்கு இந்திய குடியரசுத்தலைவர் ஒருவர், அரசு முறை பயணம் மேற்கொள்வதும் இதுவே முதன்முறையாகும்.

மாண்புமிகு கவர்னர் ஜெனரல் அவர்களே,

ஜமைக்காவிற்கு இந்தியாவிலும் எங்கள் மக்களிடமும் மிகவும் சிறப்பான இடம் உள்ளது. 1845 மே 10 அன்று 175 ஆண்டுகளுக்கு முன் சுமார் 20 இந்தியர்களை ஏற்றிய கப்பல் ஜமைக்காவிற்கு வந்து சேர்ந்தது. அதன் பிறகு வாழ்க்கையின் பலதரப்பினரான இந்தியர்கள் இந்த அழகிய நாட்டிற்கு வருகை தந்து இதனை தங்களின் தாயகமாக கொண்டுள்ளனர்.

மேன்மையானவர்களே !

ஜார்ஜ் ஹெட்லி, மைக்கேல் ஹோல்டிங், கிரிஸ் கெயில் போன்ற கிரிக்கெட் ஆளுமைகளின் பெயர்கள் இந்தியாவில் பல தலைமுறை கிரிக்கெட் ரசிகர்களால் வியக்கப்பட்டவை. ஏற்கனவே, நீங்கள் அறிந்திருப்பதுபோல், இந்தியர்கள் கிரிக்கெட் ஆர்வமுள்ளவர்கள். இதனால் புவியியல் ரீதியாக தூரத்தில் இருந்தாலும், நாம் மிகவும் நெருக்கமாக இருக்கிறோம். இந்தியாவின் விளையாட்டு பிரியர்களால் மிகவும் அறியப்பட்டவர் மகத்தான உசேன் போல்ட்.

மேன்மையானவர்களே!

பல வகைகளில் இந்தியாவும் ஜமைக்காவும் இயற்கையான கூட்டாளிகள். வலுவான துடிப்புமிக்க ஜனநாயகங்கள் என்ற முறையில் நமது நாடுகள் நெறிமுறைகள் சார்ந்த சந்தை நடைமுறைகளை ஆதரிக்கின்றன. அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான, நிலையான, பாதுகாப்பான, சட்டத்தின் அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கு ஆகியவற்றுக்கு நமது நாடுகள் மதிப்பளிக்கின்றன.

செயற்கை நுண்ணறிவு, ரோபோ தொழில்நுட்பம் போன்ற பல துறைகளில் இணைந்து பணியாற்ற நமது இளைஞர்களை நாம் ஒருங்கிணைத்து கொண்டு வரவேண்டும்.

மாண்புமிகு கவர்னர் ஜெனரல் அவர்களையும் அவரது துணைவியாரையும்,  ஜமைக்கா மக்களையும் நான் வாழ்த்துகிறேன். இந்தியா – ஜமைக்கா நட்புறவை நாம் வலுப்படுத்துவோம்.

நன்றி !

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணலாம். https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1826230

 

***************



(Release ID: 1826406) Visitor Counter : 154


Read this release in: English , Urdu , Hindi , Punjabi