நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
கோதுமை கொள்முதல் பருவத்தை மே 31 வரை நீட்டித்துள்ள மத்திய அரசு, கொள்முதலை தொடருமாறு மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் மற்றும் இந்திய உணவுக் கழகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது
प्रविष्टि तिथि:
15 MAY 2022 6:08PM by PIB Chennai
கோதுமை உற்பத்தி செய்யும் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மே 31-ந்தேதி வரை , கொள்முதலைத் தொடருமாறு மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட காலம் விவசாயிகளுக்கு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கொள்முதல் செயல்முறையைத் தொடருமாறு மாநில அரசுகள்/யூனியன் பிரதேசங்கள் விடுத்த கோரிக்கைகளை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மத்தியப் பிரதேசம், ஹரியானா, பஞ்சாப், உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், குஜராத், பீகார் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில், 2022-23 ரபி சந்தை பருவத்தில், மத்திய தொகுப்பின் கீழ் கோதுமை கொள்முதல் சீராக நடந்து வருகிறது.
முந்தைய பருவத்துடன் ஒப்பிடுகையில், மத்திய தொகுப்பின் கீழ் கோதுமை கொள்முதல் குறைவாக உள்ளது. முக்கியமாக குறைந்தபட்ச ஆதரவு விலையை விட அதிக சந்தை விலைக்கு விவசாயிகள் தனியார் வணிகர்களுக்கு கோதுமையை விற்று வருகின்றனர். கோதுமையின் உயர் விலையைக் கட்டுப்படுத்தும் வகையில் கோதுமை ஏற்றுமதியைக் கட்டுப்படுத்த மத்திய அரசு மே 13ஆம் தேதி முடிவு செய்தது.
14.05.2022 வரை, 180 லட்சம் மெட்ரிக் டன் கோதுமை கொள்முதல் செய்யப்பட்டுள்ளது, இதன் மூலம் சுமார் 16.83 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். அவர்கள் பெற்ற குறைந்தபட்ச ஆதரவு விலை ரூ.36,208 கோடியாகும்.
******
(रिलीज़ आईडी: 1825599)
आगंतुक पटल : 254