கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சர்வதேச அருங்காட்சியக தினம்: 'அருங்காட்சியகங்களின் ஆற்றல்’ என்ற கருப்பொருளில் பல்வேறு கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு தேசிய நவீன கலைக்கூடம் ஏற்பாடு

Posted On: 15 MAY 2022 1:18PM by PIB Chennai

சர்வதேச அருங்காட்சியகங்கள் கவுன்சில் குறிப்பிட்டபடி, சர்வதேச அருங்காட்சியக தினத்தைக் கொண்டாடுவதற்காக 'அருங்காட்சியகங்களின் ஆற்றல் என்ற கருப்பொருளில் பல்வேறு கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் மற்றும் நடவடிக்கைகளுக்கு புதுதில்லியின் தேசிய நவீன கலைக்கூடம் ஏற்பாடு செய்துள்ளது. சர்வதேச அருங்காட்சியக சமூகத்திற்கான தனித்துவம் வாய்ந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் சர்வதேச அருங்காட்சியக தினத்தை 1977-ஆம் ஆண்டு முதல் சர்வதேச அருங்காட்சியக கவுன்சில் கடைப்பிடிக்கிறது.  ‘கலாச்சார பரிமாற்றம், கலாச்சாரங்களை செழுமைப்படுத்துதல் மற்றும் பரஸ்பர புரிதல் மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்கான முக்கிய வழிமுறையாக அருங்காட்சியகங்கள் வகிக்கும் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த நாளின் முக்கிய நோக்கமாகும்.

மேலே குறிப்பிடப்பட்ட கருப்பொருளில் மே 16 முதல் 20-ஆம் தேதி வரை சிறப்பு நிகழ்ச்சிகளை தேசிய நவீன கலைக்கூடம் நடத்த உள்ளது. ஹஸ்தந்தரன் மற்றும் க்ஷேத்ரக்யா என்ற தலைப்பில் நவீன இந்திய கலைகள் குறித்த 2 கண்காட்சிகள் நடைபெறும்.

கலாச்சார அமைச்சக செயலாளர் திரு கோவிந்த் மோகன், இணைச்செயலாளர் திருமிகு லில்லி பாண்டேயா ஆகியோருடன் மத்திய கலாச்சாரம், சுற்றுலா மற்றும் வடகிழக்கு பகுதி வளர்ச்சி அமைச்சர் திரு ஜி கிஷன் ரெட்டி சிறப்பு விருந்தினராக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1825498

***************


(Release ID: 1825516) Visitor Counter : 242