பிரதமர் அலுவலகம்

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேதகு ஷேக் முகமது பின் ஜயேத் அல் நஹ்யான்னுக்கு பிரதமர் வாழ்த்து

Posted On: 14 MAY 2022 8:19PM by PIB Chennai

ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அபுதாபியின் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகமது பின் ஜயேத் அல் நஹ்யான்னுக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள சுட்டுரைச் செய்தியில்,

“ஐக்கிய அரபு அமீரகத்தின் புதிய அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அபுதாபியின் ஆட்சியாளர் மேதகு ஷேக் முகமது பின் ஜயேத் அல் நஹ்யான்னுக்கு  எனது நல்வாழ்த்துகள். அவரது சக்திவாய்ந்த மற்றும் தொலைநோக்குப் பார்வையுடனான தலைமையின் கீழ் நமது கேந்திர கூட்டணி தொடர்ந்து வலுப்பெரும் என்பதை நான் நம்புகிறேன், என்று தெரிவித்துள்ளார். 

*********



(Release ID: 1825496) Visitor Counter : 118