சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
நாட்டின் முதலாவது அமிர்த நீர்நிலையை உபி மாநிலம் ராம்பூரில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி தொடங்கி வைத்தார்
Posted On:
13 MAY 2022 3:54PM by PIB Chennai
நாட்டின் முதலாவது அமிர்த நீர்நிலையை உபி மாநிலம் ராம்பூரில் உள்ள பட்வாய் என்னுமிடத்தில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் திரு முக்தார் அப்பாஸ் நக்வி, மாநில ஜல்சக்தி அமைச்சர் திரு சுதந்தரதேவ் சிங் ஆகியோர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேசிய திரு நக்வி, இந்த அற்புதமான அமிர்த நீர்நிலை பிரதமர் திரு நரேந்திர மோடியின் ஊக்குவிப்பால், உத்தரப்பிரதேச முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத்தின் வழிகாட்டுதலின் கீழும் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த அமிர்த நீர்நிலையை மிகக்குறுகிய காலத்தில் திறந்து வைத்திருப்பதற்கு சாதாரண மக்கள், கிராம மக்கள், கிராம ஊராட்சி, மாவட்ட நிர்வாகம் ஆகியோரின் ஒத்துழைப்பு முக்கிய பங்காற்றியுள்ளது என்று அவர் கூறினார்.
கடந்த மாதம் பிரதமர் திரு நரேந்திர மோடி தனது மனதின் குரல் நிகழ்ச்சியில் இந்த நீர்நிலை குறித்து தெரிவித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1825093
***************
(Release ID: 1825128)