ஜல்சக்தி அமைச்சகம்

கிராமப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் வருடாந்திர அமலாக்கத் திட்டத்துக்கு தேசிய திட்ட அனுமதி குழு பரிசீலனை

Posted On: 13 MAY 2022 3:08PM by PIB Chennai

தேசிய திட்ட அனுமதி குழுவின் மூன்றாவது கூட்டம், கிராமப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டத்தை அனைத்து மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும்-2022-23-ம் நிதியாண்டில் அமல்படுத்துவது குறித்து பரிசீலிப்பதற்காக இன்று நடைபெற்றது. மெய்நிகர் வடிவில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திற்கு குடிநீர் மற்றும் தூய்மைதுறை செயலர் திருமதி வினி மகாஜன் தலைமை தாங்கினார். ஜல்சக்தி அமைச்சக அதிகாரிகள், பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய திருமதி மகாஜன் அனைத்து மாநிலங்களும் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத நிலையை உறுதி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். அனைத்து கிராமங்களிலும் தூய்மை இந்தியா திட்ட நடவடிக்கைகளை செயல்படுத்தி கிராமச்சூழலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

 கிராமப்புற தூய்மை இந்தியா திட்டத்தின் இயக்குனர் திரு அருண் பரோகா, விவாதத்தை துவக்கிவைத்தார். வருடாந்தர செயலாக்கத் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்த வேண்டும் என்று மூத்த அதிகாரிகள் வலியுறுத்தினர், இந்த திட்டத்தின் இலக்குகளை நிறைவேற்ற மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் உறுதி அளித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1825069

***************



(Release ID: 1825109) Visitor Counter : 119