குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav g20-india-2023

தில்லி நிஃப்ட் நிறுவன வளாகத்தில் காதி உயர் சிறப்பு மையத்தை திரு நாராயண ரானே தொடங்கிவைத்தார்

Posted On: 11 MAY 2022 5:24PM by PIB Chennai

கதர் துணிகள் மற்றும் ஆடைகளை பல்வகைப்படுத்தி பிரபலப்படுத்தும் விதமாகவும், காதி நிறுவனங்களின் திறனை மேம்படுத்தவும், கதர் கிராம தொழில் ஆணையம், தேசிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் (NIFT)- உடன் இணைந்து காதி உயர் சிறப்பு மையங்களை அமைக்க உள்ளது. புதுதில்லி, காந்திநகர், ஷில்லாங், கொல்கத்தா மற்றும் பெங்களூருவில் அமைக்கப்படும் இத்தகைய மையங்களை, மத்திய குறு சிறு நடுத்தர தொழில்துறை அமைச்சர் திரு நாராயண் ரானே புதுதில்லி NIFT வளாகத்தில் திறந்து வைத்தார்.

 கதர் நிறுவனங்களில் பயன்படுத்துவதற்கான, சமீபத்திய வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப விவரங்களை பதிவேற்றம் செய்வதற்கான, கதர் உயர் சிறப்பு மையங்களின் இணையதளத்தையும் மத்திய அமைச்சர் தொடங்கிவைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1824452

***************(Release ID: 1824494) Visitor Counter : 106