நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதுதில்லியில் வருவாய் புலனாய்வு இயக்ககம் ரூ.434 கோடி மதிப்புள்ள 62 கிலோ ஹெராயினைக் கைப்பற்றியது

प्रविष्टि तिथि: 11 MAY 2022 4:25PM by PIB Chennai

புதுதில்லியில்  சரக்கு விமான பொருட்களை சோதனையிட்ட போது வருவாய் புலனாய்வு இயக்ககம் 10.05.2022 அன்று 62 கிலோ கிராம் ஹெராயின் போதைப் பொருளைக் கைப்பற்றியது.

“கருப்பு வெள்ளை” என்ற குறியீட்டு பெயரில் நடத்தப்பட்ட சோதனையில் தள்ளிச்செல்லும் பெட்டிகள் என்று கூறப்பட்ட  சரக்குகளை இறக்கியபோது 55 கிலோ கிராம் எடை கொண்ட ஹெராயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. உகாண்டாவில் உள்ள என்டேபே-யிலிருந்து புதுதில்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேச விமான  நிலையத்திற்கு ஒரு சரக்கு விமானம் வந்தபோது  மேலும் 7 கிலோ  கிராம் ஹெராயின் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.  மொத்தம் கைப்பற்றப்பட்ட 62 கிலோ கிராம் ஹெராயின் போதைப் பொருளின் சட்டவிரோத சந்தை மதிப்பு ரூ.434 கோடியாகும்.

330 தள்ளிச் செல்லும் பெட்டிகள்,  இறக்கப்பட்ட போது 126 தள்ளிச் செல்லும் பெட்டிகளின் உலோக குழாய் வடிவிலான கைப்பிடிகளுக்குள் 62 கிலோ கிராம் போதைப் பொருள் கடத்திவரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இந்த தள்ளிச் செல்லும் பெட்டிகளை தருவித்த நபரை வருவாய் புலனாய்வு இயக்கக அதிகாரிகள் கைது செய்தனர். சந்தேகப்படும் மற்றவர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. மேலும் விசாரணை  நடத்தப்படுகிறது.

------


(रिलीज़ आईडी: 1824491) आगंतुक पटल : 227
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Gujarati , Urdu , Marathi , हिन्दी , Punjabi