குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
பிரதமர் திரு மோடியின் வெற்றிக்கான காரணங்களை குடியரசுத் துணைத் தலைவர் பட்டியலிட்டார்
प्रविष्टि तिथि:
11 MAY 2022 4:19PM by PIB Chennai
நவீன இந்தியாவின் மிகவும் பிரபலமான மற்றும் பெரிய தலைவர்களில் ஒருவர் என்று பிரதமர் திரு நரேந்திர மோடியை வர்ணித்த குடியரசுத் துணைத் தலைவர் திரு எம் வெங்கய்ய நாயுடு, பிரதமர் திரு மோடியின் வெற்றிக்கான காரணங்களை பட்டியலிட்டார்.
20 ஆண்டுகளாக குஜராத்தின் முதல்வராகவும், பிரதமராகவும் பல்வேறு துறைகளில் திரு மோடியின் சிந்தனைகள் மற்றும் செயல்பாட்டின் பல்வேறு அம்சங்களை வெளிக்கொண்டு வரும் வகையிலான 22 கள நிபுணர்களின், 21 கட்டுரைகளின் தொகுப்பான 'மோடி @ 20: ட்ரீம்ஸ் மீட் டெலிவரி' என்ற நூலை அவர் வெளியிட்டார்.
திரு மோடியின் சிந்தனை, வழிமுறைகள் மற்றும் தொலைநோக்குப் பார்வை பற்றிய தமது உரையில், பல்வேறு பண்புகளை குடியரசுத் துணைத் தலைவர் பட்டியலிட்டார். இவை திரு மோடியை ஒரு தனித்துவமான தலைவராகவும், செயல்பாட்டாளராகவும் மாற்றியுள்ளன என்று அவர் கூறினார்.
தனித்துவமான அனுபவப் பயணம், உழைப்பு, ஆர்வம், ஆற்றல், மக்களின் சிரமங்களைப் பற்றிய ஆழமான புரிதல், கனவு காணவும், பெரிதாகச் சிந்திக்கவும் தைரியம், உறுதிப்பாடு ஆகியவை திரு மோடியை வெற்றியடையச் செய்கிறது என்று திரு வெங்கய்ய நாயுடு குறிப்பிட்டார்.
நலன் மற்றும் மேம்பாட்டு முன்முயற்சிகளை இந்திய அளவில் செயல்படுத்துவதற்கு முன்னர், அவற்றை குஜராத்தில் பரிசோதனை செய்ததற்காக திரு மோடியை ஒரு விஞ்ஞானி என்று குடியரசுத் துணைத் தலைவர் புகழாரம் சூட்டினார்.
வாக்குறுதிகள், செயல்திறன் மற்றும் செயல்பாடுகள் திரு மோடியின் 'நம்பிக்கையின் அரசியலை' குறிக்கின்றன என்று கூறிய அவர், பிரதமர் திரு மோடியின் தலைமையின் கீழ் இந்தியா உலகளவில் அங்கீகரிக்கப்பட்டு மதிக்கப்படுகிறது என்றார். தாமதமான செயலாக்கம் மற்றும் மெதுவான முன்னேற்றத்தால் மட்டுமே பிரதமர் பொறுமையிழக்கிறார் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா, வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ் ஜெய்சங்கர், பிற மூத்த அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அரசு அதிகாரிகள் மற்றும் பல்வேறு துறைகளைச்சேர்ந்த பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1824428
***************
(रिलीज़ आईडी: 1824486)
आगंतुक पटल : 254