குடியரசுத் தலைவர் செயலகம்

மூன்று நாடுகளின் தூதர்கள் குடியரசு தலைவரிடம் தங்களது நியமனப் பத்திரங்களை வழங்கினர்

Posted On: 11 MAY 2022 1:10PM by PIB Chennai

 குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று (11 மே 2022) குடியரசுத் தலைவர் மாளிகையில், ஸ்லோவாக் குடியரசு, சூடான் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளின் தூதர்களிடமிருந்து நியமனப்பத்திரங்களை பெற்றுக்கொண்டார். நியமனப்பத்திரங்களை சமர்ப்பித்தவர்கள் விவரம் வருமாறு:

  1. திரு. ராபர்ட் மாக்சியன், ஸ்லோவாக் குடியரசின் தூதர்

2. திரு. அப்துல்லா ஒமர் பஷீர் எல்ஹுசைன், சூடான் குடியரசின் தூதர் மற்றும்

3. டாக்டர் சங்கர் பிரசாத் சர்மா, நேபாள தூதர்

நியமனப்பத்திரங்களை சமர்ப்பித்த பிறகு மூன்று நாடுகளின் தூதர்களுடனும், குடியரசுத் தலைவர் தனித்தனியாக கலந்துரையாடினார். இந்தியத் தூதர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த குடியரசுத் தலைவர், இந்த நாடுகளுடன் இந்தியா கொண்டுள்ள நட்புறவு மற்றும் அந்நாடுகளுடன் இந்தியா  பன்முக உறவை கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார். இருதரப்பு நட்புறவை பலப்படுத்துவதில் வெற்றிபெறவும், நட்பு நாடுகளின் வளம், முன்னேற்றம் மற்றும் வளமுடன் திகழவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதிய தூதர்கள் வாயிலாக அவர்களது நாடுகளின் தலைவர்களுக்கு தமது மரியாதையையும் அவர் தெரிவித்துக் கொண்டார். அதே போன்று இந்திய தூதர்களாக பொறுப்பேற்றுக் கொண்டவர்கள், இந்தியாவுடனான தங்கள் நாடுகளின் நட்புறவை வலுப்படுத்த மிகவும் நெருங்கி பணியாற்ற உறுதிபூண்டிருப்பதாக தெரிவித்தனர்.

***************



(Release ID: 1824381) Visitor Counter : 171