நித்தி ஆயோக்

சிந்தியா ட்ரோன்கள் மீதான நித்தி ஆயோக்கின் பயன்பாடு மற்றும் பயிற்சி ஸ்டுடியோவை மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய தொடங்கிவைத்தார்

Posted On: 10 MAY 2022 3:04PM by PIB Chennai

பொது சேவைகளில் ஒருங்கிணைந்த சூழலை மேம்படுத்த, ட்ரோன்களை பயன்படுத்தும் நித்தி ஆயோக்கின் பயன்பாடு மற்றும் பயிற்சி ஸ்டுடியோவை மத்திய சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் திரு ஜோதிர் ஆதித்ய சிந்தியா  தொடங்கிவைத்தார். இந்த நிகழ்ச்சியில் நித்தி ஆயோக்கின் துணைத்தலைவர் சுமன் பெர்ரி, தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய மத்திய அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா, “இந்தியாவை 2030-ம் ஆண்டுக்குள் உலகின் ட்ரோன் மையமாக உருவாக்கும் ஆற்றல் நம்மிடம் உள்ளது.  பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளபடி, பல்வேறு தொழில்கள், பாதுகாப்பு சார்ந்த துறைகள் ஆகியவற்றில் ட்ரோன்களை பயன்படுத்தும் வகையில் அதனை ஊக்குவிப்பது அவசியமாகும். ட்ரோன் நவீனத்துவத்தை பயன்படுத்தும் தொழிற்சாலைகளின் எண்ணிக்கை இந்தியாவில் விரைவில் அதிகரிப்பதை காணலாம். இது ஒரு புரட்சிக்கு வழிவகுப்பதுடன், சாதாரண மக்களின் வாழ்க்கையை சென்றடைந்து பிரதமரின் தற்சார்பு இந்தியா லட்சியத்தை நனவாக்கும்” என்று கூறினார்.

 நித்தி ஆயோக்கின் துணைத்தலைவர் சுமன் பெர்ரி பேசுகையில், ட்ரோன்களின் அணுகுதல், பல்முனை பயன்பாடு, எளிதில் உபயோகிக்கக்கூடிய வகையில் உள்ளதால் வேலைவாய்ப்பு உருவாக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சியில் ட்ரோன்கள் முக்கிய இடத்தை பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார்.

நித்தி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி அமிதாப் காந்த், பயன்பாடு மற்றும் பயிற்சி ஸ்டுடியோ மூலம் ஸ்டார்டப்கள் மற்றும் தொழில்முனைவோர் தங்களது புதுமையான கண்டுபிடிப்புகளை வெளியிடவும், அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை கொண்ட தீர்வுகளை மேற்கொள்ளவும்  முடியும் என்று கூறினார்.  

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824140

***************(Release ID: 1824204) Visitor Counter : 192