குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம்
காதிக்கான முதலாவது திறன் மையத்தை திரு நாராயண் ரானே நாளை தொடங்கிவைக்கிறார்
Posted On:
10 MAY 2022 12:54PM by PIB Chennai
“காதி உணர்வு என்பது பூமியில் உள்ள ஒவ்வொரு சகமனிதருடனான உணர்வாகும்” –மகாத்மா காந்தி
கையால் நெய்யப்படும், காதி துணிகள் மூலம் மகாத்மா காந்தி ஆயிரக்கணக்கான மக்களை ஒன்றுபடுத்தினார். காதி துணிகளை நெய்து அவற்றை அணியவும் மக்களை தயார்படுத்தினார். இந்த நோக்கத்துடன் 1957-ம் ஆண்டு முதல் காதி கிராமத்தொழில் ஆணையம் (கேவிஐசி) செயல்பட்டுவருகிறது. இத்தகைய நிறுவனங்கள் காதியின் மரபை பாதுகாத்து வருகின்றன.
காதியை புதிய இடத்திற்கு கொண்டுசெல்லும் வகையில், சிறு, குறு, நடுத்தர தொழில்கள் அமைச்சகம், காதி நிறுவனங்களை அதிகாரப்படுத்தும் விதத்தில், பரிசோதனை, புதுமை, வடிவமைப்பு மையத்தை உருவாக்கியுள்ளது. இந்த மையம், பல்வேறு தலைமுறையினருக்கும் ஏற்றவகையில் ஆடைகளை வடிவமைக்கும் நோக்கம் கொண்டதாகும். காதியை உலகளவில் பிரபலப்படுத்தும் நோக்கத்துடன், காதிக்கான திறன் மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மத்திய சிறு, குறு, நடுத்தரத் தொழில்கள் துறை அமைச்சர் திரு நாராயண் ரானே முதலாவது திறன் மையத்தை புதுதில்லியில் நாளை தொடங்கிவைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் சிறு, குறு, நடுத்தர தொழில்துறை இணையமைச்சர் திரு பானுபிரதாப் சிங் வர்மா, மத்திய ஜவுளித்துறை இணையமைச்சர் திருமதி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824093
***************
(Release ID: 1824104)
Visitor Counter : 173