வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்

திசு வளர்ப்பு தாவரங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை

Posted On: 08 MAY 2022 3:23PM by PIB Chennai

திசு வளர்ப்புத் தாவரங்களின் ஏற்றுமதியை அதிகரிக்க வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (அபேடா) , “இலை, உயிருள்ள தாவரங்கள், வெட்டப்பட்ட மலர்கள் மற்றும் நடவுப் பொருள்கள் போன்ற திசு வளர்ப்புத் தாவரங்களின் ஏற்றுமதியை ஊக்குவித்தல் என்ற தலைப்பில் இணைய கருத்தரங்கை நடத்தியது.

 

இந்தியாவில் இருந்து திசு வளர்ப்பு அமைப்பை இறக்குமதி செய்யும் முதல் பத்து நாடுகள் நெதர்லாந்து, அமெரிக்கா, இத்தாலி, ஆஸ்திரேலியா, கனடா, ஜப்பான், கென்யா, செனகல், எத்தியோப்பியா மற்றும் நேபாளம் ஆகும்.

 

 2020-2021 ஆம் ஆண்டில், இந்தியாவின் திசு வளர்ப்பு ஆலைகளின் ஏற்றுமதி 17.17 மில்லியன் அமெரிக்க டாலர்களாக இருந்தது.

 

கருத்தரங்கில், இந்த நாடுகளில் உள்ள திசு வளர்ப்பு அமைப்புக்கான சமீபத்திய தேவைப் போக்குகள் மற்றும் இந்திய ஏற்றுமதியாளர்கள்/திசு வளர்ப்பு ஆய்வகங்கள் இந்த சந்தைகளை அணுகுவதற்கு ஏற்றுமதி ஊக்குவிப்பு அமைப்பு எவ்வாறு உதவும் என்பது குறித்து அபேடா அதிகாரிகள் விளக்கினர்.

 

இந்தியாவில் வளர்க்கப்படும் திசு வளர்ப்பு தாவரங்களின் வரம்பை விரிவுபடுத்துவதற்காக, உற்பத்தி செய்யும் நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய குறிப்பிட்ட தாவரங்கள்/பயிர்களுக்கான நுண்ணுயிர்களின் பட்டியலை வழங்குமாறு ஏற்றுமதியாளர்களை அபேடா கேட்டுக் கொண்டுள்ளது.

 

இந்தியாவில் கிடைக்கும் திசு வளர்ப்புத் தாவரங்கள், வனத் தாவரங்கள், தொட்டிச் செடிகள், அலங்கார மற்றும் நடவுப் பொருட்கள் போன்ற பல்வேறு வகையான தாவரங்களை காட்சிப்படுத்த அபேடா ஒரு சர்வதேச கண்காட்சியை இந்தியாவில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டது.

 

மேலும், இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://pib.gov.in/PressReleseDetail.aspx?PRID=1823643

*********



(Release ID: 1823663) Visitor Counter : 432