உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித் ஷா-வின் வழிகாட்டுதலின்பேரில், நலன் & மறுவாழ்வு வாரியங்கள் வாயிலாக ‘மத்திய ஆயுதக் காவல் படையினருக்கு(CAPF) புனர்வாழ்வு‘ அளிப்பதற்கான திட்டத்தை, உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது
Posted On:
07 MAY 2022 3:50PM by PIB Chennai
ஓய்வுபெற்ற மத்திய ஆயுதக் காவல் படையினர் மற்றும் அஸ்ஸாம் ரைஃபிள் படைப்பிரிவினருக்கு, தனியார் பாதுகாப்பு முகமைகளில் வேலைவாய்ப்பு பெற்றுத்தரும் நோக்கில், மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா-வின் வழிகாட்டுதலின்பேரில், நலன் & மறுவாழ்வு வாரியங்கள் வாயிலாக ‘மத்திய ஆயுதக் காவல் படையினருக்கு புனர்வாழ்வு‘ அளிப்பதற்கான திட்டத்தை, உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. மறுவேலைவாய்ப்பு கோரும் ஓய்வுபெற்ற காவலர்கள், தங்களது சுய விவரங்களை, தங்களுக்கு அனுபவமுள்ள பிரிவு மற்றும் பணிபுரிய விரும்பும் இடம் போன்ற விவரங்களுடன் சேர்த்து, CAPF Punarvaas இணையதளத்தில் பதிவேற்றம் செய்து, தகுந்த வேலைவாப்ப்பினைப் பெறலாம். தனியார் பாதுகாப்பு முகமைகள் ஒழுங்குமுறைச் சட்டம் (PSARA)-ன்கீழ், தனியார் பாதுகாப்பு முகமைகளை (PSAs)-களை பதிவு செய்யவும் ஒரு இணையதளத்தை மத்திய உள்துறை அமைச்சகம் செயல்பாட்டில் வைத்துள்ளது. மத்திய ஆயுதக் காவல் படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் நலனைப் பாதுகாப்பதை, திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, தனது முன்னுரிமைப் பணிகளில் ஒன்றாக வைத்துள்ளது.
இந்த இரண்டு இணையதளங்களும் தற்போது ஒன்றிணைக்கப்பட்டிருப்பதன் மூலம், CAPF Punarvaas இணையதளத்தில் விண்ணப்பிக்கும் மத்திய ஆயுதக் காவல் படையினரின் தரவுகளை, தனியார் பாதுகாப்பு முகமைகள் ஒழுங்குமுறைச் சட்டம் (PSARA)-ன் வாயிலாக, தனியார் பாதுகாப்பு முகமைகள் அறிந்துகொள்ளலாம். இதன் மூலம், ஒரே அமைப்பு வாயிலாக வேலை தேடுவோரும், வேலை வழங்குவோரும் பயனடையலாம். மத்திய உள்துறை அமைச்சகத்தின் இந்த புதிய முன்முயற்சி, CAPF Punarvaas -ன்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஓய்வுபெற்ற காவலர்களின் தரவுகளை, தனியார் பாதுகாப்பு முகமைகள் டிஜிட்டல் முறையில் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823488
***
(Release ID: 1823527)
Visitor Counter : 335