உள்துறை அமைச்சகம்
இந்தியாவின் பசுமை எரிசக்தி முயற்சிகளை நனவாக்க, மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய சூரியசக்தி மின்சார உற்பத்திக் கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது
प्रविष्टि तिथि:
07 MAY 2022 11:15AM by PIB Chennai
மத்திய அரசின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை ஊக்குவிப்பதன் வாயிலாக, கார்பன் சமநிலை பொருளாதாரத்தை நோக்கிச் செல்லும் விதமாக, மத்திய உள்துறை அமைச்சர் திரு.அமித் ஷா-வின் வழிகாட்டுதலின்பேரில், மத்திய ரிசர்வ் காவல் படை(CAPFs) மற்றும் தேசிய பாதுகாப்புப் படை (NSG) வளாகங்களில், சூரியசக்தி மின்சார உற்பத்தி சாதனங்களை நிறுவுவதற்கான நடவடிக்கைகளை உள்துறை அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன்படி, புதுதில்லியில், மத்திய உள்துறை மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை செயலாளர்கள் முன்னிலையில், மத்திய உள்துறை அமைச்சகம், இந்திய சூரியசக்தி மின்சார உற்பத்திக் கழகம்(SECI) இடையே,புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தம், மேற்கூரை சூரியசக்தி மின்உற்பத்தி நிலையங்கள் அமைக்கும் பணியை,இருதரப்பும் கூட்டாக மேற்கொள்ள வகை செய்கிறது.
தற்போதைய தரவுகளின்படி, மத்திய ரிசர்வ் காவல்படை & தேசிய பாதுகாப்புப் படை வளாகங்களில், மொத்தம் 71.68மெகாவாட் அளவிற்கு சூரியசக்தி மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக, இந்திய சூரியசக்தி மின்சார உற்பத்திக் கழகம் மதிப்பீடு செய்துள்ளது. சூரியசக்தி மின்உற்பத்தித் துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ள இந்திய சூரியசக்தி மின்சார உற்பத்திக் கழகம், நேரடியாகவோ அல்லது முகமைகள் மூலமாகவோ அல்லது ஏலப்போட்டி மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட முகமைகள் வாயிலாகவோ, மேற்கூரை சூரியசக்தி மின் உற்பத்தி திட்டத்தை செயல்படுத்துவதில் உள்துறை அமைச்சகத்திற்கு ஒத்துழைப்பு அளிக்கும்.
*******
(रिलीज़ आईडी: 1823455)
आगंतुक पटल : 269