கலாசாரத்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா கொல்கத்தா விக்டோரியா ஹாலில் நடக்கும் விழாவில் கலந்து கொள்ள உள்ளார்
प्रविष्टि तिथि:
05 MAY 2022 4:27PM by PIB Chennai
மத்திய உள்துறை அமைச்சர் திரு. அமித்ஷா கொல்கத்தா விக்டோரியா ஹாலில் விடுதலை பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக நாளை நடக்க உள்ள முக்தி - மத்ரிகா (தாயை போன்ற சுதந்திரம்) கலை நிகழ்வில் கலந்து கொள்ள உள்ளார். இதில் மேற்கு வங்க ஆளுனர் திரு. ஜெகதீப் தன்கர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர்.
பிரபல ஒடிசி நடன கலைஞர் திருமதி. டோனா கங்குலி, செளரேந்திர செளமியோஜித் ஆகியோர் கலை நிகழ்ச்சிகளை நிகழ்த்த உள்ளனர்.
மனிதகுலத்தின் உணர இயலாத கலாச்சார பாரம்பரிய பட்டியலில் வங்காளத்தின் துர்கா பூஜை இணைக்கப்பட்டிருப்பது, யுனெஸ்கோ கல்வெட்டு மற்றும் 2021-22 இல் விக்டோரியா நினைவு மண்டபத்தின் நூற்றாண்டு விழா ஆகியவற்றின் பின்னணியில் இந்த கலாச்சார நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
வங்காளம் தனது விடுதலை போராட்ட வீரர்களை சிறப்பான முறையில் கொண்டாடுகிறது. இதோடு உலக அளவில் பிரபலமான தனது பாரம்பரிய சின்னமான துர்கா பூஜையுடன் இணைந்து இந்த முக்தி மாத்ரிகா நிகழ்ச்சியை ஏற்பாடு செய்துள்ளது.
இந்த நிகழ்ச்சி விக்டோரியா ஹாலில் உள்ள மைய மண்டபத்தில் நாளை மாலை 6 முதல் 7 மணி வரை நடக்கிறது.
***************
(रिलीज़ आईडी: 1823002)
आगंतुक पटल : 244