பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம்
அண்மைக் காலத்தில் மோடி அரசு கொண்டு வந்த ஓய்வூதிய சீர்திருத்தங்கள் சிறப்புமிக்கவை என மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்
Posted On:
05 MAY 2022 4:00PM by PIB Chennai
மண விலக்குப் பெற்ற மகள்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு குடும்ப ஓய்வூதியம், வயது முதிர்ந்த ஓய்வூதியதாரர்கள் ஆயுள் சான்றிதழ் தாக்கல் செய்வதை எளிமைப்படுத்தி, செல்போன் செயலி மூலம் முக அடையாள தொழில்நுட்ப அறிமுகம், மின்னணு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு தளர்வுகளை ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத்துறை சிறப்பான சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் (தனி பொறுப்பு), புவி அறிவியல் (தனி பொறுப்பு), பிரதமர் அலுவலகம், பணியாளர், பொது மக்கள் குறைதீர்வு, ஓய்வூதியர்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார். புதுதில்லியில் ஏழாவது அகில இந்திய ஓய்வூதிய அதாலத் நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கும், குடும்ப ஓய்வூதியத்தை விரிவுபடுத்திய நடவடிக்கைகள், ஓய்வூதியதாரர்கள் குடும்பங்களுக்கு பெரும் பயனை அளிக்கும் என்று கூறினார். இந்த சமூக சீர்திருத்தங்கள் சமுதாயத்தில் விரிவான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் தெரிவித்தார்.
2017-ம் ஆண்டு முதல், 22,494 ஓய்வூதியதாரர்களின் குறைகள் எடுக்கப்பட்டு அதில் 16,061 விண்ணப்பங்களுக்கு அதே இடத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822950
***************
(Release ID: 1822960)
Visitor Counter : 218