பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொச்சி கடற்படை தளத்தில் விருது வழங்கும் நிகழ்ச்சி 04 மே 2022

Posted On: 04 MAY 2022 5:40PM by PIB Chennai

கடற்படையில் வீரதீர செயல்புரிந்த சாதனை படைத்த மற்றும் சிறந்த சேவை புரிந்த கடற்படை வீரர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி கொச்சி கடற்படை தளத்தில்  04 மே 2022 அன்று நடைபெற்றது. குடியரசுத் தலைவரின் சார்பில் கடற்படைத்தளபதி அட்மிரல் ஹரிக்குமார் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.

 இந்நிகழ்ச்சியில் 8 பேருக்கு வீரதீரத்திற்கான பதக்கங்கள் உள்பட மொத்தம் 31 பதக்கங்கள் அளிக்கப்பட்டது. அத்துடன்  கடந்த 2020-ம் ஆண்டு  ஆகஸ்ட் 10-ந் தேதி அன்று ராஜஸ்தானில் நாகர் மாவட்டத்தில் நீர்பிடிப்பு பகுதியில் மூழ்கிய ஒருவரை மீட்கும் பணியின் போது உயிர் தியாகம் செய்த ராமாவதார் கோதாராவின் தந்தைக்கு மரணத்திற்குப் பிந்தைய விருதான  சர்வோத்தம் ஜீவன் ரக்ஷா பதக்கம் வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822679

***************


(Release ID: 1822718) Visitor Counter : 175
Read this release in: English , Urdu , Hindi , Malayalam