உள்துறை அமைச்சகம்

பசவ ஜெயந்தி விழாவையொட்டி மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா பெங்களூருவில் இன்று ஸ்ரீ பசவண்ணாவுக்குப் புகழஞ்சலி செலுத்தினார்

Posted On: 03 MAY 2022 3:55PM by PIB Chennai

பசவ ஜெயந்தி விழாவையொட்டி மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத் துறை அமைச்சர் திரு அமித் ஷா  பெங்களூருவில் இன்று ஸ்ரீ பசவண்ணாவுக்குப்

புகழஞ்சலி செலுத்தினார். கர்நாடகா மட்டுமின்றி இந்த நாடும் உலகமும் அமைதி, நல்லிணக்கம், அனைவரையும் உட்படுத்திய ஜனநாயகம் என்ற பாதையில் முன்னேறவேண்டும் என்பதைத் தாம் கூற விரும்புவதாக பசவண்ணாவின் பிறந்த ஆண்டு விழாவில் திரு ஷா கூறினார்.

 

மற்றொரு நிகழ்ச்சியில் நிருபதுங்கா பல்கலைக்கழகத்தைத் தொடங்கி வைத்ததுடன்  பல்வேறு திட்டங்களைத் திரு அமித் ஷா  தொடங்கி வைக்கவும் அடிக்கல் நாட்டவும் செய்தார். கர்நாடக முதலமைச்சர் திரு பசவராஜ் பொம்மை உட்பட பல பிரமுகர்கள் இந்த விழாவில் பங்கேற்றனர்.

 

நாட்டின் எதிர்காலம் இளைஞர்கள் மற்றும் அவர்களின் குணாம்சத்தால்  கட்டமைக்கப்படுகிறது என்று திரு அமித் ஷா கூறினார். இந்தக்  கல்லூரியில் நூறு ஆண்டுகளாக அறிவு என்பது வழிபடப்பட்டுள்ளதுபல மாணவர்கள் கர்நாடகாவிற்கும் நாட்டிற்கும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்திருக்கிறார்கள்இந்தக் கல்லூரி பல சிறப்புகளைப் பெற்றுள்ளது.  2020லிருந்து இந்தக் கல்லூரி நிருபதுங்கா பல்கலைக்கழகம் என அறியப்படுகிறது. இன்று இது முறைப்படி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் இலச்சினையும் வெளியிடப்பட்டுள்ளது.

 

பிரதமர் நரேந்திர மோடி புதிய கல்விக் கொள்கையை 2020ல்  கொண்டு வந்ததாக அமித்ஷா கூறினார். புதிய கல்விக் கொள்கையை முதலில் ஏற்றுக் கொண்ட மாநிலமாக கர்நாடகா உள்ளது என்றும் இதற்காக அதனைத் தாம் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்இந்தியக்  கலாச்சாரத்தைப் புரிந்துகொண்டு ஊக்கப்படுத்துவதற்குப்  புதிய கல்விக் கொள்கை முக்கியத்துவம் அளிப்பதாக அவர் குறிப்பிட்டார்இத்துடன் இந்தியாவை ஞானத்தின் வல்லரசாக மாற்றுவதற்கும் உலகத்திற்கு வழிகாட்ட இந்தியாவின் பொறுப்பு குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் அதில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக அவர் தெரிவித்தார்புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்த பணிக்குழு அமைத்து கர்நாடகா உதாரணமாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.

 

பெல்லாரியில் இன்று தடய அறிவியல் பரிசோதனைக் கூடமும் தொடங்கப்பட்டிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் தெரிவித்தார். பிராந்திய தடய அறிவியல் பரிசோதனைக்  கூடங்களை மிக நல்ல முறையில் பராமரிக்கும் கொள்கையைக் கர்நாடகா அமல்படுத்துவதற்காக கர்நாடக முதலமைச்சரையும்  உள்துறை அமைச்சரையும் பாராட்டுவதாக அவர் கூறினார்அறிவியல்பூர்வமான புலனாய்வு இல்லாமல் தண்டனை கிடைக்கும் விகிதத்தை அதிகரிக்க முடியாது என்று அவர் தெரிவித்தார்.

தற்போது  காவல் துறையில் -பீட் என்ற புதிய முறை தொடங்கப்பட்டுள்ளது. கர்நாடகா முழுவதும் -பீட் முறை தொடங்கப்பட்டு இருப்பதால்  குறிப்பிட்ட கால வரம்புக்குள் மிகவும் ஏழ்மையான மக்களுக்கும் காவல் துறை சேவை செய்ய இது உதவும் என்று அவர் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822332

*******



(Release ID: 1822400) Visitor Counter : 195