அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
செயற்கை நுண்ணறிவு துறையில் இந்தியாவும், ஜெர்மனியும் இணைந்து செயல்பட உள்ளன: மத்திய அமைச்சர் டாக்டர். ஜிதேந்திர சிங்
Posted On:
03 MAY 2022 3:21PM by PIB Chennai
செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட்அப்கள் மற்றும் அவற்றில் ஆராய்ச்சி மற்றும் நிலைத்தன்மை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பில் அதன் பயன்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தி இணைந்து செயல்பட இந்தியாவும், ஜெர்மனியும் ஒப்புக் கொண்டுள்ளன என்று மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் புவி அறிவியல் அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் ஜெர்மன் கல்வி மற்றும் ஆராய்ச்சிதுறை அமைச்சர் பெட்டினா ஸ்டார்க்-வாட்ஸிங்கருடனான சந்திப்புக்குப் பிறகு கூறினார்.
செயற்கை நுண்ணறிவில் இணைந்து பணியாற்ற நிறைய வாய்ப்புகள் இருப்பதாக இரு அமைச்சர்களும் ஒப்புக்கொண்டனர்.
நவம்பர் 2019 இல், அதிபர் மேர்க்கலின் டெல்லி பயணத்தின் போது, ஜெர்மனியும் இந்தியாவும் செயற்கை நுண்ணறிவில் ஒரு கூட்டு ஆராய்ச்சி திட்டத்தை நிறுவ ஒப்புக்கொண்டதை டாக்டர் ஜிதேந்திர சிங் நினைவு கூர்ந்தார். தலா 3.5 மில்லியன் யூரோக்கள் பங்களிப்புடன், உயர்கல்வியில் இந்திய-ஜெர்மன் கூட்டாண்மையை மேலும் 4 ஆண்டுகளுக்கு நீட்டிக்கவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.
நமது இருதரப்பு உறவின் மூலோபாய தூண்களில் ஒன்றான, இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு குறித்து இந்தியாவும், ஜெர்மனியும் திருப்தி தெரிவித்துள்ளன. இரு நாடுகளின் கல்வித்துறை, ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்றும் தொழில்கள் வலுவான பிணைப்பைக் கொண்டுள்ளன. மேலும் நமது மூலோபாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கூட்டாண்மைகளில் ஊக்கியாகப் பங்கு வகிக்கின்றன.
இரு நாடுகளும் இப்போது எலக்ட்ரிக் மொபிலிட்டி, சைபர் பிசிகல் சிஸ்டம், குவாண்டம் டெக்னாலஜிஸ், ஃபியூச்சர் மேனுஃபேக்ச்சரிங், கிரீன் ஹைட்ரஜன் எரிபொருள், ஆழ்கடல் ஆராய்ச்சி உள்ளிட்டவைகளில் இணைந்து பணியாற்றி வருவதாகக் குறிப்பிட்டார். இந்த பகுதிகளில் கூட்டு ஒத்துழைப்பை உருவாக்க ஆராய்ச்சி மற்றும் முன்மொழியப்பட்டது. நிலைத்தன்மை மற்றும் சுகாதாரப் பாதுகாப்பில் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துதல் போன்ற துறைகளில் இரண்டு நாடுகள் ஏற்கனவே ஒருவருக்கொருவர் பலத்தை பரிசோதிக்க தொடங்கியுள்ளன.
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கு இடையே சமீபத்தில் ஏற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து இரு அமைச்சர்களும் திருப்தி தெரிவித்தனர். இந்தியா மற்றும் ஜெர்மன் ஆராய்ச்சி அறக்கட்டளை (DFG) சர்வதேச ஆராய்ச்சி பயிற்சி குழுக்கள் (IRTG) திட்டத்திற்கு ஆதரவாக இந்திய மற்றும் ஜெர்மன் மாணவர்களின் ஆய்வு முனைவர் திட்டத்தை தொடர்வதற்கான பயிற்சியை இலக்காகக் கொண்டு திறன் மேம்பாட்டிற்கான ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்கும்.
விஞ்ஞானம் மற்றும் பொறியியலில் மனித திறன் மேம்பாடுகளுக்கான பல முன்முயற்சிகள் சமீபத்தில் வகுக்கப்பட்டுள்ளன என்று இரு அமைச்சர்களும் மகிழ்ச்சியடைந்தனர்,
பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான இந்திய அரசு புதுமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கிறது என்று டாக்டர் ஜிதேந்திர சிங் குறிப்பிட்டார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822324
***************
(Release ID: 1822398)
Visitor Counter : 232