குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து

प्रविष्टि तिथि: 02 MAY 2022 5:17PM by PIB Chennai

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு குடியரசு துணைத் தலைவர் திரு எம் வெங்கையா நாயுடு, நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்து செய்தி வருமாறு; -

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு எனது இதயப்பூர்வ வாழ்த்துக்கள் மற்றும் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

ரம்ஜான் புனித மாதம் நிறைவடைவதை குறிக்கும் ரம்ஜான் பண்டிகை, உண்மையான அர்ப்பணிப்பு, அறக்கொடை மற்றும் எல்லாம் வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவிப்பதன் கொண்டாட்டமாகும்.

இந்தப் பண்டிகை தாராள உணர்வை வலுப்படுத்துவதுடன், மக்களிடம் ஒருவருக்கொருவர் நெருக்கத்தை ஏற்படுத்துவதோடு, அவர்களிடையே நட்புறவு, சகோதரத்துவம், அன்பு மற்றும் பரஸ்பர மரியாதையை ஏற்படுத்தும் என்று நான் நம்புகிறேன்.

ரம்ஜானுடன் தொடர்புடைய இதுபோன்ற புண்ணிய மற்றும் புதுமையான சிந்தனைகள் நமது வாழ்க்கையில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் மகிழ்ச்சியை ஏற்படுத்தும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

***************

(Release ID: 1822036)


(रिलीज़ आईडी: 1822052) आगंतुक पटल : 225
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Punjabi , Gujarati