எரிசக்தி அமைச்சகம்
தேசிய திறந்தவெளி அணுகுதல் பதிவு நேரலை செயல்பாடு வெற்றி
प्रविष्टि तिथि:
02 MAY 2022 3:48PM by PIB Chennai
தேசிய திறந்தவெளி அணுகுதல் பதிவு (NOAR), 01 மே 2022 முதல் வெற்றிகரமாக நேரலையாக செயல்பட்டு வருகிறது. திறந்தவெளி அணுகுதல் பங்கேற்பாளர்கள், வணிகர்கள், மின்சார எக்ஸ்சேஞ்கள், தேசிய/பிராந்திய/மாநில லோடு அனுப்பும் மையங்கள் உள்ளிட்ட தொடர்புடைய அனைவரும் அணுகுவதற்கான ஒருங்கிணைந்த ஒற்றைச்சாளர மின்னணு நடைமுறையாக NOAR வடிவமைக்கப்பட்டுள்ளது. குறுகிய கால திறந்தவெளி விண்ணப்பங்களை மின்னணு முறையில் பரிசீலிப்பதன் மூலம், மாநிலங்களுக்கிடையே மின்சாரத்தை எடுத்துச்செல்வதில் குறுகிய கால திறந்தவெளி அணுகுதல் நிர்வாகத்தை தானியங்கி மயமாக்க இது உதவும்.
பணம் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்டுள்ள ஏற்பாடு, NOAR உடன் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதால் குறுகிய கால திறந்தவெளி பரிவர்த்தனைகளை பின் தொடரவும், நிதி கணக்கீடுகளை மேற்கொள்ளவும் வகைசெய்யும். குறுகிய கால மின்சார சந்தையை எளிதாகவும், விரைவாகவும் அணுகுவதன் மூலம் திறந்தவெளி நுகர்வோரின் தடையற்ற சந்தை பங்கேற்புக்கும் இது வகைசெய்யும்.
NOAR என்பது மத்திய மின்சார அமைச்சகத்தின் ஒரு முன் முயற்சி என்பதோடு தேவையான முறைப்படுத்தும் நடைமுறையுடன் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1822010
***************
(रिलीज़ आईडी: 1822018)
आगंतुक पटल : 301